Sundar C : மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்? இயக்குநர் சுந்தர் சி கொடுத்த ஷாக்!
Gangers Movie : நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் நடிகர் வடிவேலும் மற்றும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றது. அதை இந்த கேங்கர்ஸ் படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் சுந்தர் சி ஓபனாக பேசியுள்ளார்.

நடிகர் வடிவேலு (Vadivelu) மற்றும் இயக்குநர் சுந்தர் சியின் (Sundar C) காமினேஷனில் நீண்ட வருடத்திற்குப் பின் உருவாகியுள்ள படம் கேங்கர்ஸ் (Gangers). இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சிதான் இயக்கியுள்ளார். இந்த படமானது முற்றிலும் காமெடி கதைக்களத்துடன் (comedy storyline) உருவாகியுள்ளது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை கேத்ரின் தெரேசா (Catherine Teresa) நடித்துள்ளார். இந்த படமானது சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் காம்போவில் பல எதிர்பார்ப்புகளுடன் இந்த படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படமானது முற்றிலும் நகைச்சுவை கதைகளுடன் உருவாகியுள்ளதாம். இப்படமானது வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது சமீபத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர் சி, கேங்கர்ஸ் படத்தின் கதைக்களம் பற்றிப் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஹாலிவுட் படமான மணிஹெய்ஸ்ட் படம் தமிழில் உருவானால் எப்படி இருக்குமோ அதைப் போல, காமெடி கதைகளுடன் இந்த கேங்கர்ஸ் திரைப்படம் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேங்கர்ஸ் திரைப்படத்தின் பதிவ :
A peek into the stomach-tickling world of #Gangers ❤#TheKingsOfComedy and their #EpicReunion in 7 days 🔥
𝐆𝐀𝐍𝐆𝐄𝐑𝐒 𝐟𝐫𝐨𝐦 𝐀𝐏𝐑𝐈𝐋 𝟐𝟒 #SundarC #Vadivelu @khushsundar #AnanditaSundar @benzzmedia #CatherineTresa pic.twitter.com/n2tHtPCWob
— Avni Cinemax (@AvniCinemax_) April 17, 2025
இயக்குநர் சுந்தர் சி கேங்கர்ஸ் படைத்ததை பற்றிப் பேசியது :
அந்த நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி. “இந்த கேங்கர்ஸ் படமானது இதுவரை தமிழில் யாரும், பயன்படுத்தாத ஜானரில் உருவாகியுள்ளது, மணிஹெய்ஸ்ட் படம் போல இந்த படம் இருக்கும்,ஆனால் அதன் கதைக்களமானது நம்ம ஊருக்கு ஏற்றதுபோல் இருக்கும். ஒரு பெரிய சிட்டியில், அதிகம் பணம் வைத்துக் கடத்துவதுபோல் இருக்காது, ஒரு சிறிய கிராமத்தில் சாதாரணமான கதையில் இருக்கும்.
ஒரு வாத்தியார், ஒரு ஆட்டோ ஓட்டுநர்,இரண்டு, மூன்று அடியாள் ஆகியவர்களை வைத்து ஒரு மணி ஹெய்ஸ்ட் படம் இயக்கினால் எப்படி இருக்குமோ அது போல் இந்த படம் இருக்கும். மேலும் இந்த படத்தின் டைட்டிலுக்கு வடிவேலுதான் உதவினார். நான் கேங்ஸ்டர், கேங் ஆப் தியேட்டர் என பல டைட்டிலை யோசித்தேன். பின் சிறியதாக அழகாக இருக்கவேண்டும் என்று வடிவேலுவிடம் ஐடியா கேட்டேன், அவர்தான் கேங்கர்ஸ் என இந்த படத்தின் டைட்டிலை கூறினார். அப்படித்தான் இந்த படத்தின் டைட்டிலும் முடிவாகியது என நடிகரும்,, இயக்குநருமான சுந்தர் சி ஓபனாக பேசியிருந்தார்.