Sundar C : சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி கொடுத்த அப்டேட்!

Sangamithra Movie Update : கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் சுந்தர் சி. இவரின் முன்னணி இயக்கத்திலும் நடிப்பிலும் தற்போது கேங்கர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுந்தர் சி சங்கமித்ரா படத்தைப் பற்றி புதிய அப்டேட்டை கூறியுள்ளார்.

Sundar C : சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி கொடுத்த அப்டேட்!

இயக்குநர் சுந்தர் சி

Published: 

19 Apr 2025 16:10 PM

நடிகர் வடிவேலு (Vadivelu ) மற்றும் சுந்தர் சியின்  (Sundar C) கூட்டணியில் ரிலீசிற்கு தயாராகியுள்ள படம் கேங்கர்ஸ் (Gangers). இந்த படமானது வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படமானது முற்றிலும் நகைச்சுவை கலந்த, அதிரடி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2)  படத்தை இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிகர் சுந்தர் சியின் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக அவரின் காமெடி மற்றும் த்ரில்லர் படத்திற்கு பெரும் வரவேற்பு தமிழகத்தில் இருந்து வருகிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக அரண்மனை 4 மற்றும் மத கஜ ராஜா என இரு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இரு படங்களும் வெளியாகி அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து. இந்த படங்களைத் தொடர்ந்துதான் நீண்ட காலத்திற்குப் பின், நடிகர் வடிவேலுவுடன் கேங்கர்ஸ் படத்தில் இணைந்தார்.

இந்த படமானது ரிலீசிற்கு தயாராகிவரும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர் சி, அவரின் இயக்கத்தில் உருவாகவிருந்த சங்கமித்ரா  (Sangamithra) படத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இந்த படமானது பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடைக்கும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டில் தொடங்கவுள்ளதாக புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.

சங்கமித்ரா படம் குறித்து சுந்தர் சி கொடுத்த அப்டேட் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுந்தர் சி “சங்கமித்ரா படமானது கண்டிப்பாக அடுத்த 2026ம் ஆண்டு ஷூட்டிங் ஆரம்பமாகும். முதலில் நான் எல்லாம் கைகூடிவரவேண்டும் என்று நினைத்துப் பொறுத்திருந்தேன், ஆனால் இப்போது அந்த படத்தை எடுப்பதற்குச் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன். அநேகமாக சங்கமித்ரா ஷூட்டிங் 2026ம் ஆண்டில் தொடங்கும், எல்லாம் தயாராகத்தான் இருக்கிறது. தற்போது பணியில் இருக்கும் திரைப்படங்களை முழுவதுமாக முடித்துவிட்டு சங்கமித்ரா படத்தை இயக்குவேன்.

ஏனென்றால் அந்த படத்தை இயக்க ஆரம்பித்தால் சுமார் 2 முதல் 3 வருடங்கள் வரை வேறு ஏதிலிலும் கவனம் செலுத்த முடியாது. அதனால் இப்போது காமிட்டன படங்களை எல்லாம் முடித்துவிட்டு அந்த படத்தை நிச்சயம் இயக்குவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதை போல்தான் மத கஜ ராஜா திரைப்படத்தையும் நான் இப்போது வரும், அப்போது வரும் என்று கூறினேன். அதுவும் நான் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றது. அதைப் போல சங்கமித்ரா படமும் நிச்சயமாக வெற்றி பெரும் என்று நான் நம்புகிறேன் என்று சுந்தர் சி அப்டேட் கொடுத்துள்ளார்.

சங்கமித்ரா படம் :

சுந்தர் சியின் இந்த படமானது கடந்த 2018ம் ஆண்டிலே உருவாக்க இருந்தது. இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாநாயகனாக நடிக்கவிருந்தார். மேலும் ஆர்யா, திஷா பதானி, ஸ்ருதி ஹாசன் மற்றும் நயன்தாரா எனப் பலரும் இப்படத்தில் நடிக்கவிருந்தனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு முதல் உருவாகும் என்று இயக்குனர் சுந்தர் சி கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படம் போல இந்த படமும் மாபெரும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.