Gangers : சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்திலிருந்து என் வான்மதியே என்ற பாடல் வெளியானது!

En Vanmathiye Lyrical Song : இயக்குநர் சுந்தர் சியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திலிருந்து என் வான்மதியே என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

Published: 

21 Apr 2025 22:04 PM

நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சி (Vadivelu and Sundar C) யின் முன்னணி நடிப்பில் பல ஆண்டுகளுக்குப் பின், உருவாகியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ் (Gangers). இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். இந்த படமானது முற்றிலும் நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகளுடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடிகை கேத்ரின் தெரசா மற்றும் நடிகை வாணி போஜன் (Catherine Teresa and Vani Bhojan) என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு காமெடி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த டிரெய்லர் நிகழ்ச்சியின் போது பேசிய இயக்குநர் சுந்தர் சி, இந்த படமானது மணிஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் வெர்ஷனில் இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் சி சத்யா இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலான என் வான்மதியே என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.