Sudha Kongara : “என்னோட இன்ஸ்பிரேஷன் இவங்க” சமந்தா குறித்து பகிர்ந்த பிரபல பெண் இயக்குநர்.. வைரலாகும் வீடியோ!
Director Sudha Kongara on Samantha : தமிழ் சினிமாவில் பிரபல பெண் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் சுதா கொங்கரா. இவர் சூரரைப்போற்று, பாவ கதைகள், இறுதிச் சுற்று போன்ற ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தற்போது இவரின் முன்னணி இயக்கத்தில் பராசக்தி படமானது உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்த சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், நடிகை சமந்தாவைப் பற்றி பேசியது வைரலாகி வருகிறது.

சமந்தா மற்றும் சுதா கொங்கரா
பான் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகளிலில் ஒருவராக இருப்பவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் கடந்த 2 ஆண்டுகளாகப் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறுதியாக இந்தியில் சிட்டாடல் ஹன்னி பன்னி (Citadel Honey Bunny) என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக கதையைக் கேட்டுவருவதாகக் கூறியிருந்தார். மேலும் நடிகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் இனி நடிப்பதற்கு ஆர்வமில்லை, பெண் லீட் கதாபாத்திரத்தில் (Women lead roles) இனி நடிக்கப்போவதாக என்று அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் புதிய படத்தில் இவர் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் தற்போது தயாரிப்பாளராகப் (producer) படங்களை தயாரித்து வருகிறார். இவரைப் பற்றி பிரபல இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) நிகழ்ச்சி மேடையில் புகழ்ந்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா ‘நடிகை சமந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும், எனது பேவரட் நடிகையும் கூட. அவரின் தைரியமும், பிரச்சனைகள் எதிர்த்துப் போராடும் மன உறுதியும் எனக்கு மிகப் பெரிய இன்ஷ்பிரேஷன் ஆகும்.
அவருடன் படத்தில் பணியாற்றவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசை விரைவில் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஒருவேளை இவர்கள் இருவரின் கூட்டணியில் திரைப்படம் அமைந்தால் நிச்சயம் சமந்தாவிற்கு கம்பேக் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
சுதா கொங்கராவின் பராசக்தி :
இயக்குநர் சுதா கொங்கரா தற்போது பராசக்தி திரைப்படத்தை இயக்குவதில் மும்முரமாக இருந்து வருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு வில்லனாக நடிகர் ரவி மோகன் நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் காமினேஷனில் நிச்சயமாக இந்த படமானது வெற்றியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது 1966ம் ஆண்டும் நடந்த உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுவருகிறது என்று கூறப்படுகிறது.
முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யாதான் கதாநாயகனாக நடிக்கவிருந்தார். ஆரம்பத்தில் இந்த படத்தின் டைட்டில் புறநானூறு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டான நிலையில், படத்தின் டைட்டில் பராசக்தி என்று மாற்றப்பட்டது. இதில் நடிக்கிறாள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப், ப்ரித்வி ராஜன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படமானது மிகவும் மாறுபட்ட வின்டேஜ் கதைக்களத்துடன் உருவாகி வருகிறதாகக் கூறப்படுகிறது. இந்த பராசக்தி படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தின் 2 பாடல்களுக்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் இந்த பராசக்தி படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.