இந்த ஃபீல்ட் விட்டே போகலாம்னு நினைச்சேன்… மணி சார் சொன்ன ஒரு விசயம் – இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான புத்தம் புது காலை, சூரரைப் போற்று, பாவக் கதைகள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால் இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான மித்ர், மை ஃப்ரண்ட் என ஆங்கில மொழி படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் இயக்குநராக முதன்முதலில் அறிமுகம் ஆனது தெலுங்கு சினிமாவில் தான். 2008-ம் ஆண்டு வெளியான ஆந்திரா அந்தகாடு என்ற தெலுங்கு படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் சுதா கொங்கரா. இந்தப் படத்தில் நடிகர்கள் கிருஷ்ண பகவான் மற்றும் அபிநய ஸ்ரீ ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக ரசிகர்களிடம் அறிமுகம் ஆனார் சுதா கொங்கரா. துரோகி என்ற தலைப்பில் ஒரு பெண் இயக்கிய படம் என்று தமிழ் மக்களிடையே கவனத்தைப் பெற்றார் சுதா கொங்கரா.
இந்தப் படத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இந்தப் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தோல்வியை சந்திதது.
இயக்குநர் சுதா கொங்கராவின் இறுதிச்சுற்று:
இதனைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு நடிகர்கள் மாதவன் மற்றும் ரித்திகா சிங் இருவரையும் வைத்து இறுதிச்சுற்று என்ற ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. பாக்சிங்கை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் நாயகி ரித்தியாக சிங் நிஜ வாழ்க்கையிலும் ஒரு பாக்சர். இதனால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்தது.
நடிகர் மாதவனும் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்தது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது மாபெரும் வெற்றிப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படம்.
சிவகார்த்திகேயனை இயக்கும் சுதா கொங்கரா:
தற்போது இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் படத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா முன்னதா விருது வழங்கும் விழா ஒன்றில் இந்த சினிமா துறையை விட்டே வெளியா போகலாம் நினைத்தேன் என்று பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, துரோகி படம் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும் போது பாதியிலேயே படத்தில் நிறைய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது.
அப்போது மணிரத்னம் சார் ராவணன் படம் ஷூட்டிங்கிற்காக காட்டுக்குள் இருந்தார். நான் அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்புனேன் என்னால முடியல நான் இதவிட்டு போகலாம்னு இருக்கேன் என்று. அவர் எப்போது அனுப்பும் மெசேஜ்கு லேட்டாதான் ரிப்ளை பன்னுவார். ஆனால் அன்று 4 பக்கத்துக்கு எனக்கு ஒரு மெசேஜ் அனுப்புனார். அப்பறம் தான் அந்தப் படத்தை முடிச்சே ஆனா படம் ஊத்திக்கிச்சு.
அப்பறம் திரும்பவும் படம் இப்படி ஃப்லாப் ஆகிடுச்சுனு மணி சார் கிட்ட போய் நான் சினிமாவ விட்டுட்டு வேற எதாவது வேலைக்கு போயிடுறேன்னு பொலம்பிட்டு இருந்தேன். அப்போ அவர் சொன்ன வார்த்த நீ யார் முன்னாடி உக்காந்து பேசிட்டு இருக்க தெரியுதா? எடுத்த முதல் 3 படமும் ஃப்லாப் ஆனவன் முன்னாடி உக்கந்து இருக்க.
எந்த தைரியத்துல இப்படி உக்காந்து பேசுற என்று அவர் கொடுத்த ஊக்கம் தான் இப்படி ஒரு வெற்றிகரமான இயக்குநராக இருக்க காரணம் என்றும் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.