தனது கனவுத் திட்டத்தில் நடிகர் நானி நடிப்பதை உறுதி செய்த எஸ்.எஸ். ராஜமௌலி
Director SS Rajamouli : சமீபத்தில் நடிகர் நானியின் நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் தி தேர்ட் கேஸ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கலந்து கொண்டார். அப்போது பேசிய இயக்குநர் ராஜமௌலி தனது கனவுத் திட்டமான மகாபாரதத்தில் நடிகர் நானியும் நடிக்க உள்ளார் என்பதை உறுதி செய்துள்ளார்.

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி (Director SS Rajamouli) தற்போது நடிகர் மகேஷ் பாபுவை வைத்து SSMB 29 படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான RRR படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் நானியின் (Nani) நடிப்பில் முன்னதாக வெளியான சரிபோதா சனிவாரம் படம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அவரது நடிப்பில் ஹிட் 3 படம் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது. மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிகழ்வுகளில் படக்குழு பேசும் விசயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக நானி பேசிய விசயங்கள் இணையத்தில் பேசுபொருளானது.
ஹைதராபாத்தில் நடந்த ‘ஹிட் 3’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது கனவுத் திட்டமான ‘மகாபாரதம்’ பற்றிய ஒரு பெரிய அப்டேட்டை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சுமா கனகலா, மகாபாரதத்தில் நடிகர்கள் தேர்வு குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் ராஜமௌலி தனது நடிகர்கள் குறித்து சில அப்டேட்களை வெளிப்படுத்தினார். இது பார்வையாளர்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பெற்றது. ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவின் ‘SSMB 29’ படத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரது கனவுத் திட்டம் மகாபாரதத்தை இயக்குவது என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுமா கனகலா ஒரு சிறப்பு கேள்வி பதில் அமர்வை நடத்தினார். ஆரம்பத்தில், ‘SSMB 29’ பற்றிய அப்டேட்களைக் கேட்டார். அதற்கு, ராஜமௌலி அமைதியாக இருந்தார். பின்னர், தனது கனவுத் திட்டமான மகாபாரதம் பற்றிய வதந்திகளைப் பற்றிப் பேசினார்.
மகாபாரதத்தில் நானி நடிக்கிறாரா என்று கேட்டபோது, ” நடிகர் நானியின் கதாப்பாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று ராஜமௌலி கூறினார். இந்த அப்டேட்டைக் கேட்ட ரசிகர்கள் பலத்த ஆரவாரத்தாலும் கைதட்டலாலும் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடிகர் நானி பேசுகையில், அழைப்பை ஏற்று படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார். நான் அவரை கலந்து கொள்ளுமாறு ஒரு மெசேஜ் பட்டும் தான் அனுப்பினேன். அவர் தனது படத்தின் படப்பிடிப்பில் இருந்தார்.
அவர் வருவாரா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவரிடம் கேட்கனும் தோனுச்சு நான் கேட்டேன். ஆனால் அவர் என் அழைப்பை ஏற்று இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.