அவரின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது… அட்டக்கத்தி தினேஷை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

Director Shankar about Attakathi Dinesh: இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்று கொண்டாடப்படும் இயக்குநர் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது நடிகர் அட்டக்கத்தி தினேஷின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் அட்டக்கத்தி தினேஷின் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அவரின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது... அட்டக்கத்தி தினேஷை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர், அட்டக்கத்தி தினேஷ்

Published: 

23 Apr 2025 16:20 PM

நடிகர் அர்ஜுன் நடிப்பில் 1993-ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஷங்கர் (Director Shankar). முதல் படமே வேற லெவல் ஹிட் அடித்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (Music Director AR Rahman) இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்தும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, நண்பன், எந்திரன், ஐ, 2.0 ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவரை பிரமாண்ட இயக்குநர் என்றே திரையுலகினரும் ரசிகர்களும் அழைப்பார்கள். காரணம் இவரது படங்கள் அனைத்தும் அதிகப் பொருட் செலவில் உருவாவது வழக்கமாகக் கொண்டிருக்கும். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இவர் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகர் அட்டக்கத்தி தினேஷின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அட்டக்கத்தி தினேஷ் கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் உடன் இணைந்து நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்சினி, ஜென்சன் திவாகர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்படும் ஈகோ இரண்டு நபர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பது படத்தின் கதை. இதில் அட்டக்கத்தி தினேஷ் கெத்து என்ற கதாப்பாத்திரத்திலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் விளையாடும் போது அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையே ஏற்படும் பிரச்னை குடும்பம் வரை செல்கிறது.

பிறகு அந்தப் பிரச்னை எப்படி சரியானது, அந்த இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்ததா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷின் நடிப்பு அவருக்கு கம்பேக்காக அமைந்தது. இதனை மக்கள் உட்பட திரையுலக பிரபலங்களும் வெகுவாகப் பாராட்டினர். அதில் இயக்குநர் ஷங்கரும் அடங்குவார்.

அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் லப்பர் பந்து படத்தில் நடிகர் அட்டக்கத்தி தினேஷின் நடிப்பு அற்புதமாகவும் கச்சிதமாகவும் இருந்ததாகவும் ஏன் நடிக்கிறாரா என்று கூட தெரியாத அளவிற்கு தத்ரூபமாக இருந்தது என்றும் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.