HIT 3: நானியின் ஹிட் 3 படத்தை அவர்கள் பார்க்கவேண்டாம்.. ரசிகர்களுக்கு இயக்குநர் வைத்த கோரிக்கை!
Director Sailesh Kolanu : டோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நானி. இவரின் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாகவும், வன்முறைக்காட்சிகள் அதிகமாகவும் இருக்கும் படம் ஹிட் 3. இந்த படத்தை இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார். சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் 18 வயது குறைந்தவர்கள் இந்த ஹிட் 3 படத்தைப் பார்க்கவேண்டாம் என்று கூறியுள்ளார்.

நானியின் ஹிட் 3
தெலுங்கு சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வருபவர் நானி (Nani). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சரிபோதா சனிவாரம் (Saripodhaa Sanivaaram). இந்த படமானது ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நானி நடித்துள்ள படம் ஹிட் 3 (Hit 3). இந்த படத்தைப் பிரபல டோலிவுட் இயக்குநர் சைலேஷ் கொலனு (Sailesh Kolanu) இயக்கியுள்ளார். இந்த படத்தின் 2 பாகங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், அதை தொடர்ந்து ஹிட் 3 படமானது பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty) நடித்துள்ளார். இவர் கேஜிஎப் என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் நடித்திருந்தார். நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் காம்பினேஷனில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இந்த படமானது சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகும் 2025, மே 1ம் தேதியில்தான் வெளியாகிறது. இந்த படமானது தெலுங்கு மட்டுமில்லாமல், தமிழ் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் சிறப்பாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது இயக்குநர் சைலேஷ் கொலனு சொன்ன விஷயம் வரவேற்கப்பட்டுள்ளது. அவர் அந்த நிகழ்ச்சியில் ஹிட் 3 படமானது தொடக்கம் முதல் இறுதிவரை வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் ஹிட் 3 படத்தைப் பார்க்கவேண்டாம் என்று அவர் ஓபனாக கூறியுள்ளார்.
இயக்குநர் சைலேஷ் கொளனு பேசிய வீடியோ :
People under the age of 18, stay away from #HIT3. It is going to be very violent.#HIT3 in cinemas from May 1st ❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/T7DiAuhyZC#AbkiBaarArjunSarkaar pic.twitter.com/ZtqywLYZBu— Unanimous Productions (@UnanimousProds) April 28, 2025
இந்த வீடியோவில் இயக்குநர் சைலேஷ் கொலனு ஹிட் 3 படமானது முழுக்க வன்முறை காட்சிகள் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும் என்று கூறியிருக்கிறார். ஒரு இயக்குநரே தனது திரைப்படத்தை குறிப்பிட்ட நபர்கள் பார்க்கவேண்டாம் என்று ஓபனாக கூறிய விஷயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி ஒரு இயக்குனர் இருந்தால் நிச்சயம் அவரின் படம் வெற்றி பெரும் என்றும் கூறி வருகின்றனர்.
நடிகர் ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் வன்முறை, ரத்தம் தெறிக்கக் தெறிக்க கொலை போன்ற காட்சிகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன. மலையாளத்தில் மார்கோ தெலுங்கில் ஹிட் 3 எனப் பல மொழிகளில் படங்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. நானியின் இந்த ஹிட் 3 படமானது ஒரு வழக்கைப் பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த ஹிட் படத் தொகுப்பில் ஏற்கனவே 2 திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இந்த ஹிட் 3 படமும் நிச்சயம் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.