தொடர்ந்து பரவிய வதந்திகள்… நடிகர் ஸ்ரீ கொடுத்த விளக்கம் – வைரலாகும் வீடியோ
Actor Sri Health Update: இறுகப் பற்று படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் பாராட்டை பெற்ற நிலையில் நடிகர் ஸ்ரீயின் நடிப்பும் பாராட்டைப் பெற்றது. படம் வெற்றியடைந்ததால் நடிகர் ஸ்ரீ தொடர்ந்து நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதன்பிறகு ஸ்ரீ எந்த படங்களிலும் தோன்றவில்லை.

நடிகர் ஸ்ரீ
கோலிவுட் சினிமாவில் கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம் பிடித்து வருகிறார் நடிகர் ஸ்ரீ (Actor Sri). காரணம் மெலிந்த உடலில் சட்டை இல்லாமல் அவர் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட வீடியோ தான். அதில் இருந்து அவருக்கு என்ன நடந்தது, உடல் நிலை சரியில்லையா அல்லது படம் எதுவும் நடிப்பதற்காக நடிகர் ஸ்ரீ உடல் எடையை குறைத்துள்ளாரா என்று பல கேள்விகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் பல யூடியூப் சேனல்களுக்கு மாறிமாறி தகவல்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஸ்ரீ குறித்து பல தகவல்கள் வைரலாகி வருகின்ற நிலையில் சமீபத்தில் ஸ்ரீ வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனை தொடர்ந்து தற்போது அவரது குடும்பத்தினர் விளக்கம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகின்றது.
வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் ஸ்ரீ. இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஸ்ரீ தட்டுக்கடையில் வேலை செய்யும் பையனாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஸ்ரீ 2013-ம் ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்தார். இந்தப் படத்திலும் நடிகர் ஸ்ரீயின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சோன் பப்புடி மற்றும் வில் அம்பு ஆகிய படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் 2017-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் படத்தில் நடித்தார் ஸ்ரீ. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ஸ்ரீ இறுகப் பற்று படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டைப் பெற்றது.
நடிகர் ஸ்ரீ வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ உடல் மெலிந்து முகமே மாறி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறுதியாக 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்ட வீடியோவில் தான் புகைப் பழக்கத்தை விட்டு எத்தனை நாட்கள் ஆகிறது என்பதை தெரிவித்தார். மிகவும் சாதாரணமாக சிரித்துக்கொண்டே வீடியோ வெளியிட்டிருந்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ்கனகராஜின் எக்ஸ் தள பதிவில் ஸ்ரீயின் குடும்பத்தினர் சார்பாக ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரீ தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என்றும் அவர் சிறிது நாட்களுக்கு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க மாட்டார் என்றும் அவரது தனிமைக்கு மரியாதை கொடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.