படையப்பாவில் நீலாம்பரி கதாப்பாத்திரம் அந்த பிரபலத்தை வைத்து எழுதியது – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

இந்தப் படங்கள் எல்லாம் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தான் இயக்கும் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி மற்ற இயக்குநர்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்துக்கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவரது படையப்பா படம் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகின்றது

படையப்பாவில் நீலாம்பரி கதாப்பாத்திரம் அந்த பிரபலத்தை வைத்து எழுதியது - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

படையப்பா

Updated On: 

08 Apr 2025 15:02 PM

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் (K.S.Ravikumar) இயக்கத்தில் வெளியான படையப்பா (Padayappa) படத்தில் உள்ள நீலாம்பரி கதாப்பாத்திரம் யாரை நினைத்து எழுதியது என்பது குறித்து இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ரகுமான் நாயகனாக நடித்திருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முதல் படமே 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படங்களை இயக்குவது மட்டும் இன்றி தனது படங்களில் உள்ள சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சிம்பு, மாதவன், சூர்யா என பலரின் படங்களை இயக்கியுள்ள கே.எஸ்.ரவிக்குமார். கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே இவரது நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, தெனாலி, பஞ்சதந்திரம், தசவதாரம் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தை முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா பார்த்த சம்பவம் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி கடந்த 1999-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா.

இந்தப் படத்தில் நடிகர்கள் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன்,  நாசர்,  மணிவண்ணன், அப்பாஸ், லக்‌ஷ்மி, ராதாரவி, செந்தில் என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரம் எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே போல வில்லியாக நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாப்பாத்திரமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியானபோது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்தப் படத்தை பார்த்ததாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.

மேலும் அந்த நீலாம்பரி கதாப்பாத்திரம் ஜெயலலிதாவை இன்ஸ்பயராக வைத்து எழுதியது என்று கூறிய கே.எஸ்.ரவிக்குமார் அதற்கு ஜெயலலிதா எதாவது ரியாக்ட் செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை என்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.