Retro : சூர்யாவின் ரெட்ரோ லவ் படமா.. இல்லை ஆக்ஷ்ன் படமா..? இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் பேச்சு!
Director Karthik Subbaraj : தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான கங்குவா படத்தை தொடர்ந்து இவர் நடித்து வந்த படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். தற்போது ரிலீசிற்கு தயாராகிவரும் இப்படத்தை பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) . இவரின் இயக்கத்தில் இறுதியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமானது வெளியாகியது. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இந்த படம் ஓரளவு மக்களிடையே வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்துதான் சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) படத்தை இயக்க ஆரம்பித்தார். நடிகர் சூர்யாவின் இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ரெட்ரோ படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்து வந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா வின்டேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் கதைக்களமும் 90ஸ் காலகட்டத்தில் உள்ள படங்களில் உள்ளது போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்பராஜின் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக டோலிவுட் நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde) நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தின் ரிலீஸூக்கு இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளார். அது குறித்து முழுமையாக பார்க்கலாம்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறிய விஷயம் :
ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கிய நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் பல நேர்காணலில் கலந்துகொண்டு வருகிறார். மேலும் சமீபத்தில் நேர்காணலில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் ” ரெட்ரோ திரைப்படம் முழுக்க காதல் கதைக்களத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆக்ஷ்ன் காட்சிகளும் நிறைய உள்ளது. பொதுவாக நான் எழுதிய கதைகளிலே, ரெட்ரோ படத்தின் கதையை மிகவும் ரசித்து எழுதினேன். மேலும் இந்த கதையை எழுதும் போது எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது.
சூர்யாவின் இந்த படம் 90ஸ் காலகட்டத்தில் இந்தியன் படங்கள் எவ்வாறு இருக்குமோ அதை போல இந்த படத்தையும் எடுக்க முயற்சி செய்திருக்கிறோம். இந்த படம் காதல் கதைக்களத்தை தாண்டியும் ஒரு கலவையான க்ரைம், ஆக்ஷ்ன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்துடன் இருக்கும். கலவையாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
ரெட்ரோ :
சூர்யாவின் 44வது திரைப்படமான ரெட்ரோ வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் சூர்யாவிற்கு நிச்சயமாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.