என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்… நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நெகிழ்ந்து பேசிய கார்த்திக் சுப்பராஜ்

Karthik Subbaraj Talks About Rajinikanth: தமிழ் சினிமாவில் 2012-ம் ஆண்டு முதல் இயக்குநராக அடியெடுத்து வைத்த கார்த்திக் சுப்பராஜ் 13 வருடங்களை கடந்து தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை தக்கவைத்துள்ளார். இவரை நன்கு அறிந்த ரசிகர்களுக்கு தெரியும் இவர் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகர் என்பது.

என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்... நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நெகிழ்ந்து பேசிய கார்த்திக் சுப்பராஜ்

ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ்

Published: 

13 Apr 2025 07:27 AM

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை (Rajinikanth) நேரில் சென்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) சமீபத்தில் சந்தித்தது இணையத்தில் படு வைரலாகப் பேசப்பட்டது. காரணம் அந்த சந்திப்பின் போது சக இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரும் கார்த்திக் சுப்பராஜ் உடன் இணைந்து ரஜினிகாந்திடம் உடையாடியதற்கான சான்றாக வெளியான புகைப்படம் தான். ரசிகர்கள் அந்தப் போட்டோவைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அந்த மறக்கமுடியாத நாள் மற்றும் அந்த நிகழ்வு எப்படி நடந்தது என்பது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. அந்தப் பேட்டியில் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது, என் வீட்டிற்கு அருகில் தான் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அன்று எனக்கு பிறந்தநாள். அதனால் ரஜினி சாரைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் ரஜினி சாரிடம் நான் வந்து உங்களை சந்திக்கலாமா என்று அவரிடம் கேட்டேன். அப்போது மிகவும் மகிழ்ச்சியாக வாங்க என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நான் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றேம்.

கார்த்திக் சுப்பராஜின் எக்ஸ் தள பதிவு:

அங்கு சென்று பார்த்த போதுதான் கூலி படத்தின் இயக்குநர் ​​லோகேஷ் கனகராஜும் ஜெயிலர் 2 படத்தின் இயக்குநர் நெல்சனுடன் இருந்தார். அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சந்தித்தது மறக்க முடியாத நாளாக  எனக்குமாறியது என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

மேலும் கார்த்திக் சுப்பராஜ் குறித்து பேச வேண்டும் என்றால் அவர் கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வித்யாசமான கதைக் களத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, இரைவி ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களிடையே இவருக்கென்று தனி அடையாளத்தை தந்தது. பிறகு கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் ஸ்டாரை வைத்து பேட்ட என்ற படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ்.

படம் முழுக்க ஃபேன் பாய் மொமண்டாக இருக்கும். ஒரு மொரட்டு ரஜினி ரசிகராக அந்தப் படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். தற்போது இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் அஜித் குமாரின் ஃபேன் பாயாக குட் பேட் அக்லி படத்தை இயக்கியுள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையி பல ஆண்டுகளுக்கு முன்பே அப்படி ஒரு சம்பவத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நிகழ்த்திவிட்டார் என்றே கூறவேண்டும்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வரவிருக்கும் படம் ரெட்ரோ. நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து பெரிய அளவில் ஹிட் எதுவும் கொடுக்காத சூர்யாவிற்கு இந்தப் படம் ஒரு கம்பேக்காக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.