Suriya : முழு திருப்தி.. ரெட்ரோ படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா கொடுத்த ரிவ்யூ.. மகிழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ்!
Suriyas Reviews : கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவதான் கார்த்திக் சுப்பராஜ். இவரின் இயக்கத்தில், ரிலீசிற்கு தயாராகியுள்ள படம் ரெட்ரோ. இதில் நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது 2025, மே 1ம் தேதியில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்த படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா ரிவ்யூ கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் கங்குவா (Kanguva) படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா படம் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்டிருந்தது. மோசமான திரைக்கதையால் அந்தப் படம் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. சமீப ஆண்டுகளாக சூர்யாவின் படம் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவரும் நிலையில், இந்த படம் அவரின் கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெட்ரோவை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்துதான் தயாரித்துள்ளனர்.
முற்றிலும் காதல் மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. நடிகர் சூர்யா இந்த படத்தைப் பார்த்து மிகவும் நன்றாக இருந்ததாகவும், முழு திருப்தி அளித்தது என சொன்னதாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
ரெட்ரோ படத்தை பார்த்த சூர்யா கொடுத்த ரிவ்யூ :
நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தைப் பார்த்துவிட்டு. முழு திருப்தியாக இருப்பதாகவும், படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என்று கூறியுள்ளாராம். மேலும் சூர்யா முழு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷப்பட்டார் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் ஒன்றில் ஓபனாக கூறியுள்ளார்.
ரெட்ரோ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு பதிவு :
The celebrations just got bigger and louder 💥💥#Retro Pre-Release Event on April 26th 🤟🏻
With none other than Rowdy @TheDeverakonda as the Chief Guest ❤️🔥
❤️🔥#RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj… pic.twitter.com/vxMhyIwS55— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 24, 2025
நடிகர் சூர்யாவின் இந்த படமானது ஆரம்பத்தில் சூர்யா 44 என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த படத்தில் சூர்யா முற்றிலும் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
மேலும் இந்த பாடத்தின் ரிலீஸை முன்னிட்டு ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி என பல்வேறு இடங்களில் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் விரைவில் தெலுங்கில் நடக்கவுள்ள ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். கங்குவா தோல்விக்குப் பின் நடிகர் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.