Karthik Subbaraj : “ரெட்ரோ” என்பதற்கு அர்த்தம் இதுதான்.. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!
Retro Movie : நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தைக் கோலிவுட் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் தலைப்பிற்கு உரிய அர்த்தம் பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். தற்போது அவர் கொடுத்த விளக்கம் பற்றிப் பார்க்கலாம்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். சூர்யாவின் 44வது திரைப்படமான, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். கங்குவா திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே நடிகர் சூர்யா இப்படத்தில் கமிட்டானார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்து, பல்வேறு இடங்களில் சிறப்பாக நடந்து வந்த படப்பிடிப்புகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தது. இறுதிக்கட்ட வேலைகளில் இருந்துவரும் இப்படம் வரும் 2025, மே 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த படமானது முற்றிலும் காதல், ஆக்ஷ்ன் மற்றும் நகைச்சுவை ஆகிய கலவையான ஜானரில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யா மிகவும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ என்ற தலைப்பிற்கான அர்த்தத்தைப் பற்றிக் கூறியுள்ளார். தற்போது அவர் கூறிய விஷயம் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறிய விஷயம் :
அந்த நேர்காணலில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் “ரெட்ரோ என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கும். கடந்த காலத்தைப் பற்றிக் குறிக்கும். மேலும் இந்த தலைப்பிற்கு வேறு சில அர்த்தங்களும் இருக்கிறது. ரெட்ரோ என்றால் திரும்பிப் பார்ப்பது என்றும் ஒரு அர்த்தம் உண்டு என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விளக்கிக் கூறியுள்ளார்.
ரெட்ரோ திரைப்படத்தின் புதிய பாடல் அறிவிப்பு :
Feel the heat in keys with #TheOne 🔥#TheOneSong from #Retro – Music Video at 5PM today ⌛
A @Music_Santhosh Musical
🎙️ @sidsriram x @shanvdp x #SaNa
✒ @Lyricist_Vivek
Backing vocals by #Mahalakshmi & #Victor#LoveLaughterWar #RetroFromMay1@Suriya_Offl #Jyotika… pic.twitter.com/BrysQVIpUj— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 12, 2025
நடிகர் சூர்யாவின் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. இதைத் தொடர்ந்து மேலும் ஒரு புதிய பாடல் 2025, ஏப்ரல் 12ம் தேதியில் வெளியாகிறது. இந்த பாடலும் மக்களிடையே வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஜெயராம், சுஜித் ஷங்கர், நாசர், கருணாகரன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யாவின் பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படமும் ரிலீசாகி மக்களின் அதீத வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.