Cinema Rewind : கமல் பிரச்னையை கொண்டுவரனும் என்றே அதைச் செய்வார்.. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சம்பவம்!
Director K.S. Ravikumar : தமிழில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வந்தவர் கே.எஸ். ரவிக்குமார். இவரின் இயக்கத்தில் இதுவரை பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தசாவதாரம் படத்தில் நடிகர் கமல் ஹாசன் காட்சியை மாற்றியமைக்கக் கூறி பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியதை குறித்து அவர் பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan) . இவர் கடந்த 1960ம் ஆண்டு முதல் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக (Child Actor) சினிமாவில் அடியெடுத்து வந்தார். மேலும் அதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன் 2 (Indian 2). இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்தைத் தொடர்ந்து தக் லைப் மற்றும் இந்தியன் 3 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் தக் லைப் (Thug Life) படத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் சிலம்பரசன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. நடிகர் கமலின் நடிப்பில் யாராலும் எளிதில் மறக்கமுடியாத திரைப்படம் என்றால் தசாவதாரம் என்று கூறலாம். அந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் பல கடினமான விஷயங்களை செய்திருந்தார்.
அதில் அவரும் கிட்டத்தட்ட 9 வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் விஷ்ணு சிலையுடன் கடலுக்குள் செல்லும் காட்சியை எடுக்கும் போது, நடிகர் கமல்ஹாசன் கூறியதை குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சொன்ன விஷயம் குறித்துப் பார்க்கலாம்.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சொன்ன விஷயம் :
முன்னதாக ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனை விஷ்ணு சிலையுடன் கடலுக்குள் விடும் காட்சியில் அவர் ஒரு பிரச்னையைக் கொடுத்தார். கமல் சார் ஒரு கட்சியில் பிரச்சனையே இல்லையே என்று புது பிரச்சனையைக் கொண்டுவந்தார். தசாவதாரம் படத்தில் அவரை கடலுக்கும் போடும் காட்சியின் போதும் நான் அவரிடம் “விஷ்ணு சிலையுடன் உங்களை அப்படியே நேரடியா கடலில் போட்டுவிடுவோம்” என்று சொன்னேன். அதற்குக் கமல்ஹாசன் என்னைக் கடலுக்குள் போடுவதற்கு முன் அங்கே அழைத்துச் செல்லும் வழியில், கழுவேற்றம் மாதிரி என்னது கால் மற்றும் முதுகில் அலகு குத்தி தொங்கவிட்டு கூட்டி செல்லவேண்டும் மற்றும் அப்போது எனது மேல் கருடன் பார்க்கவேண்டும்” என்றார்.
அவர் சொன்னது போல, அந்த காட்சியும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்த காட்சியை நாங்கள் எடுக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டோம், ஆனால் அந்த காட்சி திரையரங்குகளில் எப்படி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது என அனைவருக்குமே தெரியும் என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஓபனாக பேசியிருந்தார்.