ரஜினிகாந்த்தின் ‘வள்ளி’ படத்துக்கு இசை இளையராஜாவா? கார்த்திக் ராஜாவா?
சுஹாசினி வள்ளி படம் குறித்து பேச, அப்போது குறுக்கிட்ட ரஜினி, ''வள்ளி படம் கார்த்திக் ராஜா பண்ணாங்க. இளையராஜா பண்ணவில்லை. இந்தப் படம் கார்த்திக் பண்ணா பரவால்லையா? னு கேட்டாங்க. நீங்க என்ன சொல்றிங்களோ சரினு சொன்னேன்'' என்றார். ஆனால் அதற்கு இளையராஜா மறுப்பு சொல்லவில்லை. இது இளையராஜா ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியது. பலரும் வள்ளி இளையராஜா தான் இசையமைத்தார் என்றார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) கதை எழுதி, தயாரித்து சிறப்பு வேடத்தில் நடித்திருந்த படம் வள்ளி. இந்தப் படத்தை ரஜினிகாந்த்தின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கியிருப்பார். இருவரும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கவுண்டமணி ஹீரோவாக நடித்த தலையாட்டி பொம்மைகள், இரண்டு மனம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் கோலங்கள், ரோஜா போன்ற சின்னத்திரை தொடர்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவரது மகள் ரஜினியைத் தான் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) முதலில் திருமணம் செய்திருந்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்காக அண்ணாமலை படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு இணைய இயக்குநராக கே.நட்ராஜ் பணியாற்றினார். இதனையடுத்து தனது கதையை ரஜினிகாந்த், அவரிடம் சொல்லி இயக்க சொல்லியிருக்கிறார். தானே இந்தப் படத்தை தயாரிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அப்படி உருவான இந்தப் படத்தில் பிரியாராமன் ஹரிராஜ், சஞ்சய் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகினர். இந்தப் படத்தில் தனது காட்சிகளை வெறும் 5 நாட்களில் ரஜினிகாந்த் நடித்துக்கொடுத்திருக்கிறார்.
லதா ரஜினிகாந்த் பாடிய வள்ளி பாடல்கள்
இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பெரும் பக்கபலமாக அமைந்தன. குறிப்பாக சுவர்ணலதா பாடிய என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தப் படத்தில் டிங் டாங், குக்கூ போன்ற பாடல்களை ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா 75 என்ற பெயரில் தமிழ் திரையுலகினர் சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ”என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல மியூசிக் போட்டுருக்காரு” என சொல்ல, அதற்கு இளையராஜா, ”அவரும் என்ன இருந்தாலும் அவருக்கு தான் நீங்க நல்லா பண்ணுவீங்க” என சொல்வார். இது இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது.
வள்ளி இசையமைப்பாளர் குறித்து ரஜினிகாந்த்தின் பேச்சால் சர்ச்சை
#HBDIlaiyaraaja
To all those mental pasanga. Who Thinks #Rajini trolled #ILAIYARAJA in #ILAIYARAJA1000 function about #Valli movie.. #Ilayaraja asked #Rajinikanth if #KarthikRaja is fine to compose music for the #Valli movie..#Rajinikanth said “neega enna solringalo okay” pic.twitter.com/9gRA3N7iIl— Arsenal Arun (@ArunPrasadh_25) June 2, 2023
அப்போது இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுஹாசினி வள்ளி படம் குறித்து பேச, அப்போது குறுக்கிட்ட ரஜினி, ”வள்ளி படம் கார்த்திக் ராஜா பண்ணாங்க. இளையராஜா பண்ணவில்லை. இந்தப் படம் கார்த்திக் பண்ணா பரவால்லையா? னு கேட்டாங்க. நீங்க என்ன சொல்றிங்களோ சரினு சொன்னேன்” என்றார். ஆனால் அதற்கு இளையராஜா மறுப்பு சொல்லவில்லை. இது இளையராஜா ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியது. பலரும் வள்ளி இளையராஜா தான் இசையமைத்தார் என்றார்கள்.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் கே.நட்ராஜ் விகடனுக்கு அளித்த பேட்டியில் இதற்கு மறுப்பு தெரிவித்தார். அவர் பேசியதாவது, இளையராஜா தான் அந்தப் படத்துக்கு இசையமைத்தார். நாங்கள் இசையமைக்க கோயம்புத்தூர் போயிருந்தோம். கார்த்திக் ராஜா அந்தப் படத்தில் பணியாற்றவில்லை என்றார். என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா பின்னணி இசையமைத்ததை பார்க்கும்போது இந்தப் பாடலை நன்றாக எடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன் என்று பேசினார்.