Gautham Vasudev Menon : அடுத்து அதுதான்… துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் சொன்ன தகவல்!
Dhruva Natchathiram Update : தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளிலும் இயக்குநராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரின் முன்னணி இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டே உருவாகிய திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தயாராகி இன்னும் ரிலீஸாகாத நிலையில், தற்போது இந்த படத்தின் வெளியீட்டைப் பற்றி கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார்.

துருவ நட்சத்திரம்
நடிகர் விக்ரமின் (Chiyaan Vikram) நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram) . இந்த திரைப்படத்தைப் பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon) இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2013ம் ஆண்டிலே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவிருந்ததாக அறிவித்திருந்தார். மேலும் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிகர் சூர்யா தான் (Suriya) கதாநாயகனாக நடிக்கவிருந்தார். இவரின் நடிப்பில் தான் இந்த படமானது உருவாக இருந்தது. அதன் பின் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கிய நிலையில், சில தாமதங்களுக்கு பிறகு 2023ம் ஆண்டு நிறைவடைந்தது. மேலும் இந்த படமானது சில காரணங்களால் தற்போது வரை ரிலீசாகாமல் உள்ளது.
மேலும் இந்த படமானது எப்போது ரிலீசாகும் என் ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த 2025ம் ஆண்டிற்குள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் மலையாளத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், தான் முழு முயற்சியுடன் துருவ நட்சத்திரம் படத்தினை ரிலீஸ் செய்வதில் இறங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த படமானது மேலும் வரும் 2025ம் ஆண்டு மே மாதத்தின் இறுதிக்குள் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தின் நடிகர்கள் :
இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தெலுங்கு நடிகை ரிது வர்மா இணைந்து நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் சிம்ரன், ராதிகா சரத்குமார், விநாயகன், ஆர். பார்த்திபன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
துருவ நட்சத்திரம் படத்தின் ஸ்டோரி இதுவா :
நடிகர் விக்ரமின் இந்த படமானது முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் காதல் காட்சிகளும் அதிகம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது நிச்சயமாக ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து ஏற்கனவே பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த பாடல்கள்தான் இந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்த படமானது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், துருவ நட்சத்திரம் எப்போது வெளியாகவும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படமானது வரும் 2025, மே மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்தான அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.