Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan : சிம்புவின் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. STR 51 படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து!

STR 51 Movie New Update : தமிழில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் தமிழில் 2 படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் டிராகன். இந்த படத்தைத் தொடர்ந்து சிலம்பரசனின் STR 51 படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் அப்டேட் கொடுத்துள்ளார்.

Silambarasan : சிம்புவின் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. STR 51 படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து!
சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 30 Apr 2025 15:40 PM

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நாயகனாக வலம்வருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் தக் லைப் Thug Life). இந்த படத்திற்கு நடிகர் கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் (Kamal Haasan and Mani Ratnam) இணைந்து கதை எழுதியுள்ளனர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வித்தியாசமாக உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து சிலம்பரசன் STR 49, 50 மற்றும் 51 என அடுத்தடுத்த படங்களைத் தனது கைவசம் வைத்துள்ளார். அதில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் (Ashwath Marimuthu) இயக்கத்தில் உருவாக்கவுள்ள படம் STR 51. இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தை இயக்குவதற்கு முன்னே அறிவித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் GOD Of Love என்ற ரோலில் நடிக்கவுள்ளார்.

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குவதில் தீவிரமாக இருந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, STR 51 படத்தில் கதைக்களம் குறித்தும், ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகிறது என்பதைப் பற்றியும் கூறியுள்ளார், அதைப் பற்றிப் பார்க்கலாம்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய அஸ்வத் மாரிமுத்து “டிராகன் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னே சிம்புவுடன் STR 51 படத்தை இயக்கவுள்ளேன் என்று அறிவித்திருந்தேன். நடிகர் சிலம்பரசனின் 51வது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் உருவாகவுள்ளது, எனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்தே சிம்பு என்மீது நம்பிக்கை வைத்து STR 51 படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். டிராகன் திரைப்படம் ஹிட்டானதும், அது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் சிலம்பரசனின் பலவிதமான நடிப்பையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

இந்தப் படத்தில் டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஆக்ஷ்ன் வேணுமா ஆக்ஷ்ன் இருக்கு என்று கூறினார். மேலும் இந்த STR 51 திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 செப்டம்பர் மாதத்தில் சிறப்பாகத் தொடங்கவுள்ளது. அதற்கு முன் சிம்பு அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார். இந்த STR 51 படமானது நிச்சயம் வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகர் சிம்பு வெளியிட்ட பதிவு :

நடிகர் சிலம்பரசன் இந்த STR 51 படத்தில் காதலின் கடவுள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். பழைய படங்களில் பார்த்த சிம்பு இந்த படத்தில் வருவார் என்று அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். சிம்புவின் இந்த STR 51 திரைப்படத்தில் கோட், டிராகன் போன்ற படங்களைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். எண்டெர்டைமென்ட் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஏஐ! போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!
இன்ஸ்டாகிராமில் ஏஐ! போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!...
தோனிக்கு அண்ணன் இருக்கிறாரா..? முழு பூசணியை மறைத்த கதை!
தோனிக்கு அண்ணன் இருக்கிறாரா..? முழு பூசணியை மறைத்த கதை!...
நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் சேர்க்கப்பட வேண்டும்...
நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் சேர்க்கப்பட வேண்டும்......
வின்டேஜ் லுக்கில் ரசிகர்களைக் கவரும் பூஜா ஹெக்டேவின் போட்டோஸ்!
வின்டேஜ் லுக்கில் ரசிகர்களைக் கவரும் பூஜா ஹெக்டேவின் போட்டோஸ்!...
ஆதாரின் புதிய விதிமுறை: பெயர், முகவரியை எத்தனை முறை மாற்றலாம்?
ஆதாரின் புதிய விதிமுறை: பெயர், முகவரியை எத்தனை முறை மாற்றலாம்?...
ஆந்திராவில் கோர விபத்து.. அதிவேகமாக மோதிய கார்.. 6 பேர் பலி
ஆந்திராவில் கோர விபத்து.. அதிவேகமாக மோதிய கார்.. 6 பேர் பலி...
விஜய் சேதுபதியின் மகாராஜா பார்ட் 2 உருவாகிறதா? நியூ அப்டேட்!
விஜய் சேதுபதியின் மகாராஜா பார்ட் 2 உருவாகிறதா? நியூ அப்டேட்!...
கோடி ரசிகர்கள்! ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கோடி ரசிகர்கள்! ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?...
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!...
STR 49 படத்தில் இணைந்த சிம்பு - சந்தானம் காம்போ!
STR 49 படத்தில் இணைந்த சிம்பு - சந்தானம் காம்போ!...
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பு - அஸ்வினி வைஷ்ணவ்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பு - அஸ்வினி வைஷ்ணவ்...