என் மனைவியிடம் கூட அத்தானை முறை சொல்லவில்லை… அஜித்திடம் அத்தனை முறை ஐ லவ் யூ கூறியிருக்கிறேன் – ஆதிக் ரவிச்சந்திரனின் நெகிழ்ச்சிப் பேச்சு!

Director Adhik Ravichandran: என் மனைவியிடம் கூட அத்தனை முறை சொல்லவில்லை ஆனால் நடிகர் அஜித் குமாரிடம்  அத்தனை முறை ஐ லவ் யூ கூறியிருக்கிறேன் என்று அவரது ஃபேன் பாய் மொமண்டாக ஆதிக் ரவிச்சந்திரனின் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என் மனைவியிடம் கூட அத்தானை முறை சொல்லவில்லை... அஜித்திடம் அத்தனை முறை ஐ லவ் யூ கூறியிருக்கிறேன் - ஆதிக் ரவிச்சந்திரனின் நெகிழ்ச்சிப் பேச்சு!

அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

Updated On: 

20 Apr 2025 17:54 PM

கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). முழுக்க முழுக்க அடல்ட் கண்டெண்டை கொண்ட இந்தப் படம் வெளியான போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் (Silambarasan) நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சிம்பு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் தோல்வியை சந்தித்தது அவர்களை ஏமாற்றம் அடையச்செய்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ம் நடிகர் பிரபு தேவா நடிப்பில் பஹீரா படத்தை இயக்கினார்.

இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் கோலிவுட் சினிமாவில் மாபெரும் வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருரின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டப்பட்டது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமாரை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தியைக் கேட்ட அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகும் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சாதாரண மக்களுக்கு இந்தப் படம் பெரிய அளவில் விருப்பம் இல்லை என்றாலும் அஜித்தின் முந்தய படங்களின் ரெஃபரன்ஸ்களால் நிறைந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஆதிக் ரவிச்சந்திரனின் எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் அஜித் மீது வைத்துள்ள பேரன்பு தெரிகிறது. அந்தப் பேட்டியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, நான் என் மனைவிடன் ஐ லவ் யூ என்று கூறியதை விட நடிகர் அஜித் குமாரிடம் கூறிய ஐ லவ் யூ தான் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.