பிரேமலு போலவே ஆலப்புழா ஜிம்கானா நஸ்லேனுக்கு கைகொடுத்ததா? விமர்சனம் இதோ

Alappuzha Gymkhana Movie Review: இயக்குநர் காலித் ரகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான தள்ளுமாலா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

பிரேமலு போலவே ஆலப்புழா ஜிம்கானா நஸ்லேனுக்கு கைகொடுத்ததா? விமர்சனம் இதோ

ஆலப்புழா ஜிம்கானா

Updated On: 

13 Apr 2025 10:51 AM

நடிகர் நஸ்லேன் (Naslen) மலையாளத்தில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிறகு பிரேமலு (Premalu) படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமானார். ஜூன் மாதம் 11-ம் தேதி 2000-ம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் நஸ்லேன் கே. கஃபூர். இவர் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான தண்ணீர் மதன் தினங்கள் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இதில் மேத்திவ் தாமஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வாரனே ஆவேஷமுண்டு, குருதி ஹோம், சூப்பர் ஷரண்யா, ஜோ அண்ட் ஜோ, நெய்மர் ஆகிய படங்களில் இரண்டாவது நாயகனாகவே நடித்து வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலமாக நாயகனாக சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

பிரேமலு படத்தின் கதை என்ன?

நடிகர்கள் நஸ்லென், மமிதா பைஜு  உடன் இணைந்து சங்கீத் பிரதாப், சியாம் மோகன் எம்.மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். காதல், காமெடி என இளைஞர்கள் வாழ்வில் நடக்கும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாக வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்தப் படத்தை பிரபல நடிகர் ஃபகத் பாசில் தயாரித்துள்ளார். சாதாரண கதைகளத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் கடந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் கல்லூரியில் படிப்பை முடித்த நஸ்லென் சொந்த ஊரான கேரளாவிற்கு செல்கிறார். அங்கு இருந்து மேல் படிப்பிற்காக கனடா செல்ல வேண்டும் என்று தனது நண்பருடன் சேர்ந்து முயற்சி செய்கிறார். அதில் அவரது நண்பருக்கு விசா கிடைத்த நிலையில் நஸ்லெனுக்கு போதிய பணம் இல்லாமல் இருக்க விசா கிடைக்கவில்லை.

இதனால் தனது மற்றொரு நண்பன் சங்கீத் பிரதாப் உடன் சேர்ந்து ஹைதரபாத் வருகிறார். அங்கு வந்து வேலை செய்துக்கொண்டே படிக்கிறார் நஸ்லென். அப்போது ஒரு திருமணத்தில் மமிதா பைஜுவை பார்த்ததும் காதலிக்க தொடங்கிறார். இப்படி படம் காதல் காமெடி என சென்றுகொண்டிருக்கிறது.

இறுதியாக மமிதா நஸ்லென் காதலை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு. சம கால இளைஞர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாக இந்தப் படத்தில் காட்டியிருப்பார் இயக்குநர் கிருஷ் ஏடி. படம் மலையாளத்தில் உருவாகி இருந்தாலும் பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே படம் சூப்பர் ஹிட் அடித்தது. படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆலப்புழா ஜிம்கானா படம் எப்படி இருக்கு?

பிரேமலு படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அடுத்ததாக நடிகர் நஸ்லேனின் நடிப்பில் பெரிதும் எதிர்பர்த்துக் காத்திருந்த படம் ஆலப்புழா ஜிம்கானா. காரணம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்தப் படத்தில் நஸ்லேன் உடன் இணைந்து நடிகர்கள் லுக்மான் அவரன், கணபதி எஸ்.பொடுவால், சந்தீப் பிரதீப், அனகா ரவி, பிராங்கோ பிரான்சிஸ், பேபி ஜீன், மற்றும் சிவ ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளனர். 12-ம் வகுப்பு பொத் தேர்வில் தோல்வி அடையும் நண்பர்கள் குழு கல்லூரியில் ஸ்போர்ஸ்ட் கோட்டாவில் சேர்வதற்காகா முடி செய்கிறார்கள்.

அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டு தான் பாக்ஸிங். இந்த பாக்ஸிங்கை தேர்வு செய்யவும் படத்தில் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விளையாட்டாக இந்த பாக்ஸிங்கை தேர்ந்தெடுத்த இவர்கள் அதில் வெற்றிப் பெற்றார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே உடன் ஒப்பிடுகிறார்கள்.

ஆனால் இது அப்படி இருக்காது. காரணம் மான் கராத்தே படத்தில் விளையாட்டின் சீரியசை உணர்ந்து சிவகார்த்திகேயன் அதற்காக மெனக்கெடுவது இருக்கும். ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. நாயகன் நஸ்லேன் என்று கூறினாலும் படத்தில் அனைத்து கதாப்பாத்திரத்திற்கும் இயக்குநர் சரியான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் வெளியான போது பிரபலமான நடிகை அனகா ரவி படத்திலும் குறைந்த காட்சிகளிலேயே இடம் பிடித்திருந்தார். ஆனால் அவர் வரும் காட்சிகளை திரையரங்கில் ரசிகர்கள் ரசித்தனர். மேலும் ஹீரோ என்றால் நிச்சயமாக அனைத்திலும் சிறந்தவனாக இருக்க வெண்டும் அல்லது க்ளைமேக்சிலாவது அவன் அனைத்தையும் சாதித்தவனாக இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோடைப்பை இந்தப் படம் உடைத்துள்ளது என்றே கூற வேண்டும்.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவான இந்தப் படம் பிரேமலு மாதிரி இருந்ததா என்றால் அப்படி கூறிவிட முடியாது. ஆனால் படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். முழுக்க முழுக்க காமெடி படத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல காமெடி படத்தைப் பார்த்த உணர்வுடன் திரையரங்கை விட்டு வெளியே வருவார்கள்.