அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கா?

Good Bad Ugly: 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து அஜித் குமார் ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த படம் குட் பேட் அக்லி.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கா?

குட் பேட் அக்லி

Updated On: 

10 Apr 2025 12:10 PM

கடந்த 2024-ம் ஆண்டு ஆண்டு வெளியான தளபதி விஜய்யின் (Vijay) தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Goat) படத்தில் அஜித் குமாருக்கு ஒரு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மங்காத்தா படத்தின் பின்னணி இசையையும் அவரது அட்டகாசம் படத்தின் ஒரு பாடலையும் கூட படத்தில் இணைத்துக்கொண்டனர். இதே போல தற்போது ரசிகரக்ளுக்கு இன்ப அதிர்சி கொடுக்கும் விதமாக அஜித் குமார் (Ajith Kumar) ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான குட் பேட் அக்லியில் (Good Bad Ugly) விஜய்யின் ஐகானிக் வசனங்களில் ஒன்றை பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் படம் இன்று ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. தமிழ் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி திட்டமிடப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் ஏற்கனவே படத்தின் வெளியீட்டை கொண்டாடும் நிலையில் எதிர்பாராத விதமாக விஜய் ரெஃபரன்ஸ் என்று கூறும் தகவல்கள் உற்சாகத்தை அதிகரித்துள்ளன. விஜய்யின் பிரபலமான வசனத்தை அஜித் எப்படிச் சொல்கிறார் என்பதுதான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக கோட் படத்தின் விளம்பரங்களின் போது இயக்குநர் வெங்கட் பிரபு வரவிருக்கும் படத்தில் விஜய் ரெஃபரன்ஸ் குறித்து சூசகமாக கூறினார். அதில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அஜித் குமாரின் ஒரு ரெஃபரன்ஸ் உள்ளது. அது ஒரு குரல்வழியாகவோ, படமாகவோ அல்லது குறிப்பாகவோ இருக்கலாம், அதை இப்போது என்னால் வெளிப்படுத்த முடியாது.

அதேபோல், குட் பேட் அக்லியில் ஒரு உரையாடல் வடிவத்தில் தளபதி விஜய் பற்றிய குறிப்பு உள்ளது. ஆரம்பத்தில் பொங்கல் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டிருந்த குட் பேட் அக்லி அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் வெளியீட்டிற்கா தள்ளி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய வெளியீட்டு தேதியை அறிவித்தது.

இந்த நிலையில் விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு வெளியான குட் பேட் அக்லி படம் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் அஜித் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ளது. முன்னதாக இந்த இயக்குநரின் மார்க் ஆண்டனி வெற்றி பெற்றதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்து.

இதற்கிடையில், இந்த படத்திற்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் மற்றும் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் இயக்க நேரத்துடன் ஒப்புதல் அளித்துள்ளது.  குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா கிருஷ்ணன், உஷா உதுப், ராகுல் தேவ், கிங்ஸ்லி, ரோடீஸ் ரகு, பிரதீப் கப்ரா, பிரியா பிரகாஷ், சிம்ரன், டின்னு ஆனந்த், சாயாஜி ஷிண்டே, ஜாக்கி ஷெராஃப், சுனில் மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.