Dhanush : மீண்டும் இணைந்த தனுஷ் – மாரிசெல்வராஜ் கூட்டணி.. எதிர்பாராத டி56 திரைப்படத்தின் அப்டேட்..!

Dhanush D56 Movie Announcement : நடிகர் தனுஷ் முன்னணி நடிப்பில் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான கர்ணன் படத்தைத் தொடர்ந்து, தற்போது டி56 திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். தற்போது எந்தவித முன் அறிவிப்புகளும் இல்லாமல் தனுஷின் டி56 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhanush : மீண்டும் இணைந்த தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணி.. எதிர்பாராத டி56 திரைப்படத்தின் அப்டேட்..!

நடிகர் தனுஷ் டி56 திரைப்படம்

Published: 

09 Apr 2025 21:57 PM

கோலிவுட் சினிமாவில் பல்வேறு துறைகளில் சாதித்து வருபவர் தனுஷ் (Dhanush) . இவரின் இயக்கத்தில் இறுதியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam) என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி எனத் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Anand L. Rai) இயக்கத்தில் உருவாகிவரும் தேரே இஷ்க் மெய்ன்  (Tere Ishq Mein) படத்தின் ஷூட்டிங் பனாரஸில் சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது, தனுஷ் தமிழில் அவரின் இயக்கத்திலே இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அருண் விஜய்யும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷின் “டி56”  (D56) திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj)  இயக்கவுள்ளார். இவரின் இயக்கத்தில் ஏற்கனவே தனுஷ் கர்ணன் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும், இந்த கூட்டணி இணைந்துள்ளது. தற்போது இந்த படத்தின் அறிவிப்பை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் வெளியிட்ட பதிவு ;

எந்தவித எதிர்பார்ப்புகளும், முன் அறிவிப்பும் இல்லாமல் இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை வழங்கியுள்ளது. நடிகர் தனுஷின் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவுள்ளார். தற்போது வெளியான இந்த போஸ்டரில் மண்டை ஓட்டுடன் கூடிய பெரிய வாள் ஒன்று இருக்கிறது.

மேலும் இந்த போஸ்டரானது “Roots begin a Great War” என்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. நடிகர் தனுஷின் இந்த படமானது வரும் 2026 அல்லது 2027ம் ஆண்டில் வெளியாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

தனுஷின் புதிய படங்கள் :

நடிகர் தனுஷ் இந்த படத்திற்கு முன் தற்போது, தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, டி55 போன்ற திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். இதை இட்லி கடை படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்தியில் உருவாகிவரும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின், ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியுள்ளது.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பனாரஸில் நடந்து வருகிறது. மேலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் முன்னணி இயக்கத்தில் டி55 படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இப்படங்களின் ஷூட்டிங்கை தொடர்ந்துதான் நடிகர் தனுஷ் டி56 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.