Vadivelu : நகைச்சுவை என்பது கல்வெட்டு கிடையாது… அவரால் தான் நான் நடிக்கவில்லை.. வடிவேலு பேச்சு!
Actor Vadivelu Career Break Reason : தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி என்றாள் நமது நினைவிற்கு வருபவர் வடிவேலு. இவர் சமீபகாலமாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு மற்றும் சுந்தர் சி -யின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேங்கர்ஸ். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வடிவேலு, இயக்குநர் ஒருவருடனான பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

நடிகர் வடிவேலுவின் (Vadivelu ) முன்னணி நடிப்பில் இறுதியாக மாமன்னன் (Maamannan) மற்றும் சந்திரமுகி 2 (Chandramukhi 2) போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சியுடன் (Sundar C) கேங்கர்ஸ் (Gangers) படத்திலும், நடிகர் பகத் பாசிலுடன் மாரீசன் என்ற படத்திலும் நடித்து வந்தார். இதில் நடிகரும், இயக்குநருமான சுந்தர்சி-யின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேங்கர்ஸ். இந்த படமானது முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் நடிகை கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனித்தை ஈர்த்தது. அதை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர்கள் வடிவேலு மற்றும் சுந்தர் சி என் இருவரும் கலந்துகொண்டனர். அதில் பேசிய வடிவேலு திரைப்படத்தில் பெரிய இயக்குநரின் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அந்த படத்தில் நடிக்கும்போது அவரின் நடிப்பு தடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது அதுக்கு குறித்து முழுமையாக பார்க்கலாம்.
அந்த பெரிய இயக்குநரின் படத்தில் நடித்தது குறித்து நடிகர் வடிவேலு பேச்சு :
அந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, “சினிமாவில் நகைச்சுவை என்பது கல்வெட்டு கிடையாது. நான் ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடித்தேன், அவர் நான் நடிக்க நடிக்க, சிரிச்சிகிட்டே நல்லா இருக்கு என்று கூறினார், அதன் பிறகு அவர் ஸ்கிரிப்டில் டைப் பண்ணியிருக்கிறதை மட்டும் பேசுங்க என்கிறார். நான் உடனே அவருடன் அப்போது நடிப்பை டெவலப் பண்ணகூடாதா, அதில் உள்ளது படி நடித்தால் போதுமா என்று கேட்டேன்.
அதற்கு அந்த பெரிய இயக்குநர் “நல்லா இருக்கு , அதில் இருக்கிறதை மட்டும் நீங்கள் பேசினால் போதும்” என்றார், அந்த பெரிய இயக்குநருக்கும் எனக்கும்தான் இடையில் சண்டை ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் நான் 2,3 வருடமாக படங்களில் நடிக்காமல் இருந்தேன், அவர் யார் என்று நான் கூற விரும்பவில்லை. அவரிடம் நான் டைப் அடித்தைதை பேசினால் அது நகைச்சுவை கிடையாது கல்வெட்டு, நகைச்சுவை தன்னால் ஊறவேண்டும் என்று நான் கூறினேன். அந்த பெரிய இயக்குநர் மீண்டும் “அதில் எழுதியிருந்ததை மட்டும் பேசினால் போதும்” என்றார். அந்த படத்தை நான் முடித்துவிட்டு எஸ்கேப் ஆனேன்” என்றார் நடிகர் வடிவேலு .
கேங்கர்ஸ் திரைப்படத்தின் பதிவு :
Four days till our #EpicReunion‘s fun forte takes over the world ❤
It’s #Gangers week 🔥
𝐆𝐀𝐍𝐆𝐄𝐑𝐒 𝐟𝐫𝐨𝐦 𝐀𝐏𝐑𝐈𝐋 𝟐𝟒 #SundarC #Vadivelu @khushsundar #AnanditaSundar @benzzmedia #CatherineTresa @vanibhojanoffl @CSathyaOfficial @krishnasamy_e @editorpraveen pic.twitter.com/AOjTCLJkGc
— Avni Cinemax (@AvniCinemax_) April 20, 2025
வடிவேலு, சுந்தர் சி மற்றும் கேத்ரின் தெரசாவின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. மத கஜ ராஜா மற்றும் அரண்மனை 4 படத்தை போல இந்த படமும் நிச்சயம் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.