மோகன்லாலின் எம்புரானை காமெடி என கூறிய பி.சி.ஸ்ரீராம்…!

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'L2: எம்புரான்' படத்தைப் பற்றிய தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். பின்னர் அவர் அந்த எக்ஸ் தள பதிவு நீக்கிவிட்டார். நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய இந்தப் படம் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு இன்று ஓடிடியில் வெளியிடப்பட்டது.

மோகன்லாலின் எம்புரானை காமெடி என கூறிய பி.சி.ஸ்ரீராம்...!

பி.சி.ஸ்ரீராம்

Published: 

25 Apr 2025 17:42 PM

மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலின் (Mohanlal) நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் எம்புரான் (Empuraan). இந்தப் படத்தை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியிருந்தார். படம் மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகமான லூசிஃபர் படம் 2019-ம் ஆண்டு வெளியாகி மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாகவே இந்த எம்புரான் படத்தின் மீது தென்னிந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை அதிகமாக வைத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே படம் இருந்ததாகவும் அவர்கள் விமர்சனங்களை தெரிவித்தனர். சிலர் இந்தப் படம் வன்முறையை தூண்டும் விதமாக இருந்தது என்றும் கமெண்ட் செய்து வந்தனர்.

படத்தின் மீது எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு படத்தில் 27 கட்கள் செய்தது. இதனால் படத்தில் இருந்து சுமார். 2.30 நிமிடங்கள் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டது. முந்தய பாகமான லூசிஃபர் படத்தில் நடித்த மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் இவர்களுடன் இணைந்து இந்தப் பாகத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, அபிமன்யு சிங், நிகத் கான் என புதிதாகவும் நடித்தனர்.

திரையரங்குகளில் சூப்பர் ஹிட் அடித்த எம்புரான் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையெ நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது. இந்த நிலையில் ஓடிடியில் இந்தப் படத்தைப் பார்த்த பிரபல ஒளிபதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

அதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் “Empuraan on OTT is a comedy” என்று பதிவிட்டிருந்தார். இந்த எக்ஸ் தள பதிவு வைரலானதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவர் அந்தப் பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் அதனை ஸ்கிரீன் சாட் எடுத்த ரசிகர்கள் இந்த பதிவிற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஸ்ரீராம் போன்ற மதிப்பிற்குரிய நபரிடம் இருந்து இந்த மாதிரியான விமர்சனக் கருத்தை எதிர்பார்க்கவில்லை என்று கூறி சில நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்ற்னார். முன்னதாக படத்திற்கு எதிர்ப்பு வந்த போது இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் அதனை எடிட் செய்ய கூடாது என்றும் பி.சி.ஸ்ரீராம் தனது எக்ஸ் தள பக்கதில் படத்திற்கும் படக்குழுவிற்கும் ஆதரவாக வெளியிட்ட பதிவும் தற்போது வைரலாகி வருகின்றது.