பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும் – ராஜிவ் மேனன்
Rajiv Menon about Bombay Movie: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பம்பாய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜீவ் மேனன் இந்தப் படம் தற்போது வெளியானால் என்ன நடக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியது சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே கேமராமேன், இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மையோடு வலம் வருபவர் ராஜிவ் மேனன் (Rajiv Menon). இவர் இயக்குநர் மணிரத்னமுடன் (Maniratnam) இணைந்து பம்பாய், குரு, கடல் ஆகிய படங்களுக்கு ஒளிபதிவை மேற்கொண்டுள்ளார். இவர் தனியாக படங்களும் இயக்கியுள்ளார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம், புத்தம் புது காலை ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இவர் படங்களை இயக்குவது ஒளிபதிவு செய்வது மட்டும் இன்றி மின்சார கனவு, விடுதலை படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் வெப்பன் ஆகிய படங்களில் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே பரிச்சையமான இவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்து வைரலாகி வருகின்றது.
ராஜிவ் மேனன் பேட்டி:
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான பம்பாய் படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்ட ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியிடுவதாக இருந்தால் வெளியீட்டில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். பம்பாய் வெளியானதிலிருந்து மூன்று தசாப்தங்களில் இந்தியா ‘குறைந்த சகிப்புத்தன்மை’ கொண்டதாக மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய ராஜிவ் மேனன், 1993 மும்பை குண்டுவெடிப்புகள் மற்றும் அவை தூண்டிய கலவரங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட படத்தில் உள்ள சில காட்சி அமைப்புகளைப் பற்றியும் அவர் பேசினார். O2 India யூடியூப் சேனலில் பேசிய ராஜீவ் மேனன், “பாம்பே போன்ற ஒரு படத்தை இன்று உருவாக்க முடியாது. இந்தியாவில் நிலைமை மிகவும் நிலையற்றதாக உள்ளது.
மக்கள் மிகவும் வலுவான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். மதம் இவ்வளவு பெரிய பிரச்சினையாகிவிட்டது. அதனால் இந்தியாவில் தற்போது பாம்பே போன்ற ஒரு படத்தை நீங்கள் எடுக்க முடியாது. அதை திரையரங்கில் வெளியிட்டால் தியேட்டர் எரிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்தின் பம்பாய் படம்:
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பம்பாய். இந்தப் படத்தில் நடிகர்கள் அரவிந்தசாமி மற்றும் மனிஷா கொய்ராலா இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் இந்து முஸ்லீம் ஆன இவர்கள் இருவரும் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்வார்கள்.
மும்பையில் போய் தங்களது வாழ்க்கையை தொடங்கி இருவருக்கும் ட்வின்ஸ் ஆண் குழந்தைகள் இருப்பார்கள். அழகாக சென்று கொண்டிருக்கும் இந்த குடும்ப வாழ்க்கையில் மும்பையில் ஏற்படும் இந்து – முஸ்லிம் மதக் கலவரத்தால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் மிகவும் தத்ரூபமாக காட்டியிருப்பார்.
இறுதியில் அவர்கள் வாழ்க்கை நிலை என்ன ஆனது. அவர்கள் இரண்டு குடும்பத்தினரும் அவர்களை ஏற்றுக்கொண்டார்களா என்பதே படத்தின் கதை.