Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Udhayanidhi Stalin: கமலின் படம் ஓடாமல் போனதற்கு நானே காரணம்.. உதயநிதி ஓபன் டாக்!

சாய் வித் சித்ரா நிகழ்ச்சி பேட்டியில் கமல்ஹாசன் நடித்த படம் ஒன்றின் தோல்விக்கு தான் காரணம் என உதயநிதி தெரிவித்திருப்பார். ரெட் ஜெயன்ட் மூவிஸின் ஆரம்பகால வெற்றிகளையும், 'விக்ரம்' படத்தின் வெற்றி பற்றியும் அவர் பேசியிருந்தார். இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Udhayanidhi Stalin: கமலின் படம் ஓடாமல் போனதற்கு நானே காரணம்.. உதயநிதி ஓபன் டாக்!
கமல்ஹாசன் - உதயநிதி ஸ்டாலின் Image Source: X
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Mar 2025 11:54 AM

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என ஒரு ரவுண்டு வந்தவர், தற்போதைய தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin). 2008 ஆம் ஆண்டு விஜய் (Thalapathy Vijay) நடித்த குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராய் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சூர்யா நடித்த ஆதவன் படத்தின் மூலம் நடிகராக எண்ட்ரீ கொடுத்தார். 2011 ஆம் ஆண்டு வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவாக மாறினார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு மாமன்னன் (Maamannan) என்ற படத்தில் நடித்தார். முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இதனிடையே அவரின் பழைய பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வரும். அந்த வகையில் தனது சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அப்போதைய நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், கமலின் மன்மதன் அம்பு படம் தோல்வியடைய தான் காரணம் என தெரிவித்திருந்தார். அதனைப் பற்றிப் பார்க்கலாம்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் முதல் மூன்று படங்களும் நல்ல இயக்குனர்கள் மற்றும் பெரிய கதாநாயகர்கள் அமைந்தார்கள். அதன்படி விஜய், சூர்யா மற்றும் கமல்ஹாசன் ஆகிய மூன்று பேரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதேபோல் தரணி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரும் சிறப்பாக பணியாற்றினார்கள். கமலுடன் நான் படம் இணையும்போது கே.எஸ்.ரவிக்குமார் தான் வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். நாங்கள் மூன்று பேரும் இணைந்த மன்மதன் அம்பு படம் சரியாக போகவில்லை.

அதற்கு நான் தான் காரணம் என தெரியும். கமல்ஹாசன் என்னை அழைத்து தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் ஒரு கதை இருக்கிறது என சொன்னார். அதை வைத்து ஆக்‌ஷன் படம் பண்ணலாம் என கூறினார். ஆனால் நான் ஆக்ஷன் எல்லாம் வேண்டாம் சார். பஞ்சதந்திரம் போன்றே கே.எஸ்.ரவிக்குமாருடன் நீங்கள் இணைந்த காமெடி கதைகள் மாதிரி ஜாலியான ஒரு படம் வேண்டும் என சொன்னேன். அப்படிதான் மன்மதன் அன்பு படம் உருவானது.

அந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த சில விஷயங்களினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரியும். மன்மதன் அம்பு படம் தோல்வி அடைந்தது மிகப்பெரிய குறையாக எனக்குள் இருந்தது. ஆனால் அதனை விக்ரம் படம் போக்கிவிட்டது. அந்தப் படத்தின் வெற்றி எல்லாவற்றையும் சரி செய்து விட்டது. மன்மதன் அம்பு தோல்வியடைந்த போது ஒரு மாதிரி இருந்தது. நாம் வியந்து பார்த்த கமல் சார் உடன் ஒரு படம் இணைந்தோம். இப்படியாகி விட்டதே என நினைத்த நிலையில் விக்ரம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது” என உதயநிதி தெரிவித்திருப்பார்.

மன்மதன் அம்பு vs விக்ரம் 

கடந்த 2010 ஆம் ஆண்டு கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், உஷா உதுப், சங்கீதா, ஊர்வசி, ரமேஷ் அரவிந்த். ஓவியா உள்ளிட்ட பலரும் நடித்த படம் “மன்மதன் அம்பு”. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் சரியாக செல்லவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி என பலரது நடிப்பிலும் வெளியான படம் “விக்ரம்”. அனிருத் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வசூலில் ரூ.400 கோடியை அள்ளிய விக்ரம் படம் கமலின் கேரியரில் மிகச்சிறந்த படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...