OTT Release : இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 2 படங்கள்!

Watch To Watch: திரையரங்குகளில் வாரம் வாரம் புதுப் படங்கள் வெளியாவது போல ஓடிடியிலும் வாரம் வாரம் புதுப் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

OTT Release : இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 2 படங்கள்!

வீர தீர சூரன், எம்புரான்

Updated On: 

23 Apr 2025 09:35 AM

வீர தீர சூரன்: நடிகர் சியான் விக்ரம் (Vikram) நடிப்பில் மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன் (Veera Dheera Sooran). இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான இந்த அதிரடி ஆக்‌ஷன் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் விக்ரமின் மாஸான நடிப்பைப் பார்க்க நீண்ட நாட்களாக ஆவளாக இருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்தாக அமைந்தது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, ப்ருத்வி ராஜ், பாலாஜி என பலர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் படத்தில் காளி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை துஷாரா விஜயுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் வாழும் விக்ரமிற்கு முன்கதை மிகவும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கின்றது. அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து குடும்பத்திற்காக அமைதியான முறையில் மளிகை கடை நடத்தி வாழ்ந்து வருகிறார் விக்ரம்.

எதிர்பாராத சூழல் காரணமாக பழைய வாழ்க்கையில் இருந்தவர்களுடன் மீண்டு சந்திப்பு ஏற்படுகிறது. அதன்பிறகு அமைதியாக சென்றுகொண்டிருந்த விக்ரமின் வாழ்க்கை மீண்டும் அதிரடியாக மாறுகிறது. இதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே படத்தின் கதையாக உள்ளது.

வீர தீர சூரன் படத்தின் இரண்டாவது பாகம் முதலில் வெளியான நிலையில் முதல் பாகம் அதாவது காளியின் முன்கதை அந்த பாகத்தில் காட்டப்படும் என்று இயக்குநர் அருண் குமார் தெரிவித்திருந்தார். இதனால் இந்த பாகத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி படம் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

L2: எம்புரான்:

நடிகர் மோகன்லால் நடிப்பில் மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. 2019-ம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளியானது. நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன படம் லூசிஃபர்.

இந்தப் படத்தில் அவர் நடிக்கவும் செய்துள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் மலையாள சினிமாவில் வசூல் சாதனையில் புதிய பெஞ்ச் மார்க்கை அமைத்தது. பாசிட்டிவான பல விமர்சனங்களைப் பெற்றாலும் சிலர் இந்தப் படம் வன்முறைய தூண்டும் விதமாக உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிகர்கள் டொவினோ தாமஸ், பிருத்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமுடு என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். முதல் பாகத்தில் இருந்தவர்களுடன் இரண்டாம் பாகத்திலும் பலர் இந்தப் படத்தில் இணைந்திருந்தனர். தியேட்டரில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடி வெளியீட்டை முடிவு செய்துள்ளது. அதன்படி படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் 24-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு அன்று வெளியாகவுள்ளது.

Related Stories
அவரின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது… அட்டக்கத்தி தினேஷை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
Gautham Vasudev Menon : அடுத்து அதுதான்… துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் சொன்ன தகவல்!
Retro : சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது ஆரம்பம்? ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் அப்டேட் இதோ!
எங்க அப்பா அவர் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றாறு… குட் பேட் அக்லி சர்ச்சைக்கு பிரேம்ஜி பதில்
இது முதல் முறை இல்லை… ஏஐ மூலம் வீடியோவை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ரம்யா சுப்ரமணியன் கண்டனம்!
நான் ஒரு இரவு ஆந்தை… பகலில் வேலை செய்வது போர் – ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்