Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பல ஆண்டு காத்திருப்பு.. திருமண பந்தத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலங்கள்.. குவியும் வாழ்த்துகள்!

Pavani Reddy And Aamirs Wedding : தமிழில் சின்னதிரை மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான சின்ன தம்பி என்ற தொடரின் மூலம் பிரபலமானார். இந்த தொடரை அடுத்ததாக தமிழில் பிக்பாஸ் சீசன் 5ல் நுழைந்த அவருக்கு, வாழ்க்கை துணையாக கிடைத்தவர் அமீர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இன்று 2025, ஏப்ரல் 20ம் தேதியில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

பல ஆண்டு காத்திருப்பு.. திருமண பந்தத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலங்கள்.. குவியும் வாழ்த்துகள்!
அமீர் மற்றும் பாவனி ரெட்டி
barath-murugan
Barath Murugan | Published: 20 Apr 2025 19:10 PM

தமிழில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான பிக்பாஸ் (Bigg Boss)  நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி அமீர் மற்றும் பாவனி ரெட்டி (Pavani Reddy and Aamir). நடிகை பாவனி தமிழில் விஜய் தொலைக்காட்சியில் வெளியான “சின்ன தம்பி” (Chinna Thampi) என்ற தொடரில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில தொடர்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சின்னதிரைக்குள் நுழையும் முன் பாலிவுட் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் தெலுங்கிலும் பல படங்களில் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் இறுதியாக நடிகர் அஜித்தின் துணிவு (Thunivu) படத்திலும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இவ்வாறு சின்னத்திரை தொடர்களை தொடர்ந்து பல படங்ககளில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் பாவனி ரெட்டி. படங்களில் நடித்து பிரபலமான இவர், கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான பிக் பாஸ் சீசன் 5ல் (Bigg Boss Season 5 Tamil)  போட்டியாளராக பங்கேற்றார்.

அதில் அவருடன் சக போட்டியாளராக பங்கேற்ற நடன கலைஞர் அமீர் என்பவரை காதலிக்க தொடங்கினார். சுமார் 4 ஆண்டுகளாக தொடர்ந்த காதல், தற்போது திருமண பந்தத்தில் இணைத்துள்ளது. இன்று 2025, ஏப்ரல் 20ம் தேதியில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி திருமணம் செய்துகொண்டுள்ளனர். தற்போது இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர் திருமண புகைப்படங்கள் :

பாவனி ரெட்டி கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் சில பிரச்னைகளின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இரண்டாவது திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருந்த பாவனி தற்போது நீண்ட கால சிந்தனைக்கு பின், காதலர் அமீரை காதலித்து வந்தார். அமீர் பிரபல நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து இவர்கள் இருவரும், 4 வருடங்களாக லிவிங் டுகெதரில் இருந்து வந்தனர்.

மேலும் நீண்ட கால யோசனைக்கு பின்தான் திருமண பந்தத்தில் இணையவுள்ளோம் என நடிகை பாவனி ரெட்டி சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இவர்கள் இருவரின் திருமணமும் உறவினர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.

இந்த திருமண விழாவில் புதுமண தம்பதியர்களான தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது கணவருடன் கலந்துகொண்டார். பிரபல தொகுப்பாளினி பிரியங்கவிற்கும் திருமணமாகி சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில், அமீர் மற்றும் பாவனி ரெட்டியின் திருமணத்தை முன்னால் நின்று தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் அவரின் கணவரும் இணைந்து நடத்தியுள்ளனர்.

வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...