Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெலுங்கின் மிஸ் பண்ணக்கூடாத மிகச்சிறந்த திரில்லர் படங்கள் – உங்க சாய்ஸ் எது?

தமிழில் அவர்களது படங்கள் வெளியாகும்போது எப்படி வரவேற்கப்படுமோ அதற்கு நிகரான வரவேற்பு தெலுங்கு ரசிகர்களிடமிருந்தும் கிடைக்கும். அதனால் தங்களது படங்கள் வெளியாகும் போது சூர்யா, கார்த்தி தவறாமல் தெலுங்கு புரமோஷன்களில் கலந்துகொள்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கிலிருந்தும் தரமான படங்கள் வெளியாகி வருகின்றன.

தெலுங்கின் மிஸ் பண்ணக்கூடாத மிகச்சிறந்த திரில்லர் படங்கள் – உங்க சாய்ஸ் எது?
சிறந்த திரில்லர் படங்கள்
karthikeyan-s
Karthikeyan S | Published: 17 Apr 2025 19:57 PM

பொதுவாக தெலுங்கு சினிமா என்றாலே லாஜிக் என்பதும் துளியும் இல்லாத கமர்ஷியல் படங்கள் தான் நினைவுக்கு வரும். தெலுங்கு ரசிகர்கள் போல திரைப்படங்களைக் கொண்டாடும் ரசிகர்கள் உலகில் வேறு எங்கும் இல்லை. பொதுவாக தமிழ் சினிமாவில் கோலிவுட், ஹாலிவுட் தவிர பிற மொழி படங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் தெலுங்கு ரசிகர்கள் பிற மொழி படங்களையும் சமமாக கொண்டாடுவார்கள். தமிழ் ஹீரோக்களான விஜய் (Vijay), சூர்யா (Suriya), கார்த்தி, விக்ரம் (Vikram), தனுஷிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே அங்கிருக்கிறது. தமிழில் அவர்களது படங்கள் வெளியாகும்போது எப்படி வரவேற்கப்படுமோ அதற்கு நிகரான வரவேற்பு தெலுங்கு ரசிகர்களிடமிருந்தும் கிடைக்கும். அதனால் தங்களது படங்கள் வெளியாகும் போது சூர்யா, கார்த்தி தவறாமல் தெலுங்கு புரமோஷன்களில் கலந்துகொள்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கிலிருந்தும் தரமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சிறந்த தெலுங்கு திரில்லர்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஷணம் (Kshanam)

அடிவி சேஷ், அடா சர்மா, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம். இந்தப் படத்தின் கதையை ஹீரோ அடிவி சேஷ் தான் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வசிக்கும் ரிஷியிடம் அவரது முன்னாள் காதலியான அவளது குழந்தை காணாமல் போய்விட்டது எனவும் தனக்கு உதவி தேவை எனவும் வருத்தம் தெரிவிக்கிறார். இதனையடுத்து இந்தியா வரும் ரிஷி விசாரணையைத் தொடங்க, ஸ்வேதாவின் கணவரும் காவல்துறையும் ஸ்வேதாவுக்கு அப்படி ஒரு குழந்தையே இல்லை என்கின்றனர். இது குறித்து உண்மை கண்டுபிடிக்க முயல அவர் எதிர்கொள்ளும் சவால்களே இந்தப் படம். இந்தப் படம் தமிழில் சிபிராஜ் நடிப்பில் சத்யா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

நீவீவெரோ (Neeveevaro)

ஆதி, டாப்ஸி, ரித்திகா சிங் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம். பார்வை மாற்றுத்திறனாளியான ஆதியின் வாழ்க்கையில் வாணி என்ற பெண் நுழைகிறாள். இருவரும் காதலிக்கத் தொடங்குகையில் வாணி திடீரென மாயமாகிவிடுகிறாள். அவரை தேடும் முயற்சியில் வாணி குறித்த அதிர்ச்சி தகவல்கள் ஆதிக்கு தெரிய வர அதனை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதே இதன் கதை. அமேசான் பிரைம் வீடியோவில் இந்தப் படத்தை பார்க்கலாம்.

கூடச்சாரி (goodachari)

ஷணம் படத்துக்கு பிறகு கதை திரைக்கதை எழுதி நடித்திருக்கும் படம் அதிவி சேஷ். ரா என்ற தேசிய பாதுகாப்பு அமைப்பில் சேரும் அர்ஜுனை முக்கிய ஸ்பை மிஷனுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் எதிர்பாராத வகையில் அவன் மீது அவனது உயர் அதிகாரியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறான். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

விருபக்ஷா (Virupaksha)

சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம். ஹீரோ சூர்யா, தனது தாய் ஊரான ருத்ராவனம் கிராமத்திற்கு வருகிறார். ஆனால் அங்கு தொடர் மர்ம மரணங்கள் நிகழ்கின்றன. இதன் பின்னணியை சூர்யா ஆராயும்போது திடுக்கிடும் உண்மைகள் அவருக்கு தெரியவருகின்றன. இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.

கோட்சே (Godse)

சத்ய தேவ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம். கோட்சே என்பவர் பல முக்கிய அரசியல் தலைவர்களை கடத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவர்களை மீட்க வைஷ்ணவி என்ற காவல்துறை அதிகாரி நியமிக்கப்படுகிறார். கோட்சேவின் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வைஷ்ணவிக்கு தெரியவருகிறது. இது நெகோஷியேசன் என்ற கொரியன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.. நடிகை பூஜா ஹெக்டே சொன்ன தகவல்!
நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.. நடிகை பூஜா ஹெக்டே சொன்ன தகவல்!...
10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?...
சனிபகவானின் அதிர்ஷ்ட பார்வை.. இந்த ராசிகளுக்கு நல்லகாலம்
சனிபகவானின் அதிர்ஷ்ட பார்வை.. இந்த ராசிகளுக்கு நல்லகாலம்...
அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை இவ்வளவு வசூல் செய்துள்ளதா?
அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை இவ்வளவு வசூல் செய்துள்ளதா?...
கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!
கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!...
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?...
சமையல் எண்ணெயில் கொழுப்பு அமிலம்... மார்பக புற்றுநோய் வருமா?
சமையல் எண்ணெயில் கொழுப்பு அமிலம்... மார்பக புற்றுநோய் வருமா?...
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி..
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி.....
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை:
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!...