Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹீரோவாக பிரபு தேவா – கெஸ்ட் ரோலில் பிரபுவுக்கு பதிலாக கமல்…. – ‘காதலா காதலா’ உருவான பின்னணி

Kaathala Kaathala: இந்தப் படத்தை முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருந்தார். கே.எஸ்.ரவிக்குமாரின் பல படங்களில் புரொடக்சன் மேனேஜராக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். அவர் தயாரிப்பாளராக அறிமுகமான இந்தப் படத்தில் பிரபு தேவா ஹீரோவாகவும் பிரபு கெஸ்ட் ரோலில் நடிக்கவைப்பது எனவும் திட்டமிட்டிருக்கிறார்கள். பிரபு கெஸ்ட் ரோலில் நடிக்க தயங்கியிருக்கிறார்.

ஹீரோவாக பிரபு தேவா – கெஸ்ட் ரோலில் பிரபுவுக்கு பதிலாக கமல்…. – ‘காதலா காதலா’ உருவான பின்னணி
பிரபு தேவா - கமல்ஹாசன்
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 Mar 2025 12:39 PM

90களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) இரண்டு விதமான பாதைகளில் பயணிக்கத் துவங்கினார். ஒரு படம் வித்தியாசமான பரிச்சார்த்த முயற்சிகள் கொண்ட படமாக இருந்ததால் உடனடியாக முழு நீள காமெடி படத்தில் நடிப்பார். அவரது காமெடி படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அப்படி ஒரு படம் தான் காதலா காதலா (Kaathala Kaathala). ராஜபார்வை, பேசும்படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் ஆகிய படங்களுக்கு பிறகு 6 வது முறையாக கமல் சிங்கிதம் ஸ்ரீநிவாச ராவுடன் இணைந்த படம். இளையராஜா  – கமல் காம்போவில் வந்த பாடல்கள் என்றால் பாடல்கள் அட்டகாசமாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் முதன்முறையாக இளையராஜாவின் (Ilaiyaraaja) மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் முதன்முறையாக கைகோரத்தார். அதற்கு முன்பு உல்லாசம் படத்தில் கார்த்திக் ராஜா இசையில் முத்தே முத்தம்மா என்ற பாடலை அஜித்துக்காக பாடியிருந்தார். காதலா காதலா படம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றிப் படமாக அமைந்தது.

கெஸ்ட்ரோலுக்காக வந்த கமல் ஹீரோவான பின்னணி

படத்தில் இருக்கும் சுவாரசியமான காட்சிகளை விட உருவான போது ஏகப்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்தப் படத்தை முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருந்தார். கே.எஸ்.ரவிக்குமாரின் பல படங்களில் புரொடக்சன் மேனேஜராக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். அவர் தயாரிப்பாளராக அறிமுகமான இந்தப் படத்தில் பிரபு தேவா ஹீரோவாகவும் பிரபு கெஸ்ட் ரோலில் நடிக்கவைப்பது எனவும் திட்டமிட்டிருக்கிறார்கள். பிரபு கெஸ்ட் ரோலில் நடிக்க தயங்கியிருக்கிறார். இந்த விஷயம் குறித்து கமலுக்கு தெரிய வர கமல் நானே இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன், என் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வழங்கும் என உன் தயாரிப்பு நிறுவனத்தை அதன் பிறகு சேர்த்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார் இதனை ஒரு பேட்டியில் சொன்ன தேனப்பன், கமலின் இந்த செயலால் அவரது மகளுக்கு கமலின் அம்மா பெயரான ராஜலட்சுமி என பெயர் வைத்ததாகவும் அதுவே அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயராக மாறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் பிரச்னையின் காரணமாக அந்தப் படம் துவங்கப்படாமல் இருந்திருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமாரால் அந்தப் படத்தில் தொடர முடியவில்லை. அதன் பிறகு இந்தப் படத்தில் இயக்குநராக சிங்கிதம் ஸ்ரீநிவாச ராவ் ஒப்பந்தமாகியிருக்கிறார். கமல் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்த படம் இரண்டு ஹீரோக்கள் கொண்ட படமாக மாறியிருக்கிறது. கிரேஸி மோகனும் உள்ளே வர படம் பரபரப்பாகியிருக்கிறது.

மீனாவுக்கு பதிலாக வந்த சௌந்தர்யா

ஹீரோயினாக ரம்பாவும் மீனாவும் முதலில் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஆனால் அந்த நேரம் மீனா சுந்தர்.சியின் நாம் இருவர் நமக்கு இருவர் படத்தின் கால்ஷீட் பிரச்னையால் விலக நேர்ந்திருக்கிறது. இதனையடுத்து முதன்முறையாக கமலுக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்தார். கமல் எப்பொழுதுமே தனது காமெடி படங்களில் பெரிய காமெடி நடிகர்களை ஒப்பந்தம் செய்வதில்லை. ஆனால் இந்தப் படத்தில் வடிவேலுவுடன் கைகோர்த்தார். வடிவேலுவின் ஆரம்ப காலகட்டத்தில் கமலின் தேவர்மகன், சிங்கார வேலன் படங்களில் நடித்தார். ஆனால் காமெடி நடிகராக வளர்ந்த பிறகு கமலுடன் நடித்த முதலும் கடைசியுமான படம் காதலா காதலா தான். அரசியல் விமர்சகர் சோ ராமசாமி கடைசியாக நடித்த படம் இதுதான்.

தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...