Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு இடையே அருகில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்

Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து தற்போது நெல்சம் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு இடையே அருகில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Apr 2025 20:14 PM

கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்த படம் வேட்டையன் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தவறுதலாக நடந்த என்கவுண்டரை தொடர்ந்து நடைபெறும் விசாரையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ஃபகத் பாசில், அசல் கோலார், ரக்‌ஷன், ஆடுகளம் கிஷோர், ரித்திகா சிங் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்தார். கூலி என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் முடித்தார். படத்தின் வெளியீட்டிற்காக போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றது. படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள ஆனைகட்டி மலைகள் அருகே படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் காலையில் படப்பிடிப்பிற்கு செல்லும் வழியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ:

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அந்த வீடியோவில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி கோவிலுக்குள் சென்று பிரார்த்தனை செய்வது இடம்பெற்றுள்ளது. சில ரசிகர்கள் ரஜினிகாந்த் உடன் அங்கு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.

ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரது அன்றாட பயணத் திட்டங்களைக் கவனித்து, அவரை ஒரு முறை பார்க்க அவர் செல்லும் இடத்தில் காத்திருந்தனர். ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 2025-ம் ஆண்டு, ரஜினிகாந்த் ஆனைகட்டியில் இருந்து மங்கரைக்குச் சென்று கொண்டிருந்தார். அங்கு வழியில் காத்திருந்த ரசிகர்கள் அவரின் காரை மறித்து நிப்பாட்டி மாதேஸ்வரன் சிவன் கோயிலுக்கு கூட்டிச் சென்றார். பூசாரி அவரை வரவேற்று பூஜை செய்தார். கோயில் பூசாரி ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !
ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !...
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!...
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!...
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!...
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?...
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!...
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!...
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!...
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது...
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!...