நான் ஒரு இரவு ஆந்தை… பகலில் வேலை செய்வது போர் – ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்
Music Director AR Rahman: இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவர் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். இரவு முழுவதும் தூங்கி பகலில் வேலை செய்வது "சலிப்பூட்டுவதாக" இருப்பதாகவும், இரவு முழுவதும் வேலை செய்வதையே தான் விரும்புவதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (A.R. Rahman) தனக்கு பகலில் வேலைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை என்றும் இரவில் வேலை செய்துவிட்டு பகலில் தூங்குவதே பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பகலில் வேலை செய்யும் பழக்கம் மிகவும் போர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மாஷபெல் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில் இரவு நேரம் அவருக்கு எவ்வளவு விருப்பமானது என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் எப்போதும் பகலில் பயணம் செய்ய விரும்புவதில்லை என்றும் இரவு நேர பயணங்களே அவருக்கு விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் பயணம் செய்யும் போது ட்ராஃபிக் இருக்காது என்றும் அது தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாலையில் தர்காவிற்கு சென்றுவிட்டு போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பே வீட்டிற்கு வந்து தூங்கிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரகுமான், “தற்போது எல்லாம் நான் இரவில் தூங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று ஒரு தயக்கத்துடன் கூறியுள்ளார். மேலும் இரவில் தூங்கி காலையில் எழுந்திருப்பது மிகவும் சலிப்பை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரகுமான் என் வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை நான் அதை மோசமானது என்று சொல்லவில்லை. நான் வழக்கமாக அதிகாலை 2:30 மணிக்கு எழுந்து காலை 7 மணிக்கு தூங்கச் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் விருதின் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது தமிழ் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிசியாக பணியாற்றி வருகிறார். இவர் 1992-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்ஸ்டா பதிவு:
இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே ஏ.ஆர்.ரகுமானுக்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மணிரத்னம் உடன் இவரது இசையில் வெளியான திருடா திருடா, பம்பாய், இருவர், தில் சே, அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடையே, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு முதல் தற்போது வெளியீட்டிற்கு காத்திருக்கும் தக் லைஃப் படம் வரை இவர்கள் காம்போ சூப்பர் ஹிட் ஆகும்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இறுதியாக தமிழில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருதிகா உதயநிதி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தனர். படம் விமர்சன ரீதியாக வெற்றி அடைவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.