Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கஞ்சா வழக்கில் பிரபல இயக்குநர்கள் இரண்டு பேர் கைது!

Director Khalid Rahman and Director Ashraf Hamza: மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் வெளியான உண்டா படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குநர் காலித் ரகுமான். இவர் டொவினோ தாமஸை வைத்து தள்ளுமாலா என்ற சூப்பர் ஹிட் படத்தை தென்னிந்திய சினிமாவிற்கு கொடுத்திருந்தார்.

கஞ்சா வழக்கில் பிரபல இயக்குநர்கள் இரண்டு பேர் கைது!
காலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Apr 2025 09:14 AM

உண்டா, தள்ளுமாலா மற்றும் ஆலப்புழா ஜிம்கானா படங்களை இயக்கியதன் மூலம் மோலிவுட் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானவர் இயக்குநர் காலித் ரகுமான் (Khalid Rahman). இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஆலப்புழா ஜிம்கானா. பிரேமலு படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் நஸ்லேன் (Naslen K. Gafoor) நாயகனாக இந்தப் படத்தில் நடித்திருந்தார். நடிகர்கள் அனகா ரவி, லுக்மான் அவரன்,  சந்தீப் பிரதீப், கணபதி எஸ்.பொடுவால், பிராங்கோ பிரான்சிஸ், பேபி ஜீன், மற்றும் சிவ ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாளத் திரையுலகில் தொடர்ந்து போதைப் பொருள் விவகாராம் பூதாகரமாகியுள்ள நிலையில் பிரபல இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா உட்பட மூன்று பேர் கொச்சியில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் ஷாலிஃப் முகமது என கூறப்படுகின்றது.

கலால் சிறப்புப் படையினருக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவலின் பேரில், அதிகாலையில் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 1.6 கிராம் கலப்பின கஞ்சாவைக் கண்டுபிடித்ததாகக் தெரிகிறது. மேலும் காலித் ரஹ்மான், அஷ்ரப் ஹம்சா மற்றும் ஷாலிஃப் முகமது ஆகிய மூவரும் போதைப் பொருளைப் பயன்படுத்த முயன்ற போது போது கைது செய்யப்பட்டதாக கலால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கைதுகளைப் பதிவு செய்த பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அளவு ஒரு வணிக வழக்குக்கான வரம்பிற்குக் குறைவாக இருப்பதாகக் கூறி அதிகாரிகள் அவர்களுக்கு ஜாமீன் வழங்கினர். மேலும் அவர்களுக்கு கஞ்சாவை விற்றவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக கலால் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் காலித் ரஹ்மான் சமீபத்தில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா, உண்டா, தள்ளுமாலா, அனுரக கரிக்கின் வெல்லம் மற்றும் லவ் உள்ளிட்ட பல மலையாளப் படங்களை இயக்கியதற்காக அறியப்படுகிறார். அஷ்ரப் ஹம்சா தமாஷா மற்றும் பீமண்டே வாழி போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான படமான தள்ளுமாலாவுக்கு இணை எழுத்தாளராகவும் இவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

STR49 காம்போ.. மேடையில் பாடலை பாடி அசத்திய சிம்பு, சாய் அபயங்கர்!
STR49 காம்போ.. மேடையில் பாடலை பாடி அசத்திய சிம்பு, சாய் அபயங்கர்!...
நடிகை சிம்ரன் சொன்ன டப்பா ரோல் நடிகை யார்? அவர் சொன்ன விளக்கம்!
நடிகை சிம்ரன் சொன்ன டப்பா ரோல் நடிகை யார்? அவர் சொன்ன விளக்கம்!...
அஞ்சலக திட்டங்கள் - வட்டி விகிதங்களை தெரிந்துக்கொள்வது எப்படி?
அஞ்சலக திட்டங்கள் - வட்டி விகிதங்களை தெரிந்துக்கொள்வது எப்படி?...
வள்ளியூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து.. 4 பேர் பலி
வள்ளியூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து.. 4 பேர் பலி...
மத கஜ ராஜா குறித்து ஓப்பனாக பேசிய சந்தானம்
மத கஜ ராஜா குறித்து ஓப்பனாக பேசிய சந்தானம்...
எம் சாண்ட், பி சாண்ட் விலை அதிரடி குறைப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்
எம் சாண்ட், பி சாண்ட் விலை அதிரடி குறைப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்...
டூரிஸ்ட் ஃபேமிலி பட விழாவில் காதல் புரபோஸ் செய்த இயக்குநர்
டூரிஸ்ட் ஃபேமிலி பட விழாவில் காதல் புரபோஸ் செய்த இயக்குநர்...
விஜய் அதிமுக கூட்டணிக்கு வரலாம் - ராஜேந்திர பாலாஜி!
விஜய் அதிமுக கூட்டணிக்கு வரலாம் - ராஜேந்திர பாலாஜி!...
அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார் -நயினார் நாகேந்திரன்
அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார் -நயினார் நாகேந்திரன்...
ரஜினி சார் என் அப்பாவை விட வித்தியாசமானவர்- நடிகை ஸ்ருதி ஹாசன்!
ரஜினி சார் என் அப்பாவை விட வித்தியாசமானவர்- நடிகை ஸ்ருதி ஹாசன்!...
மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியானது ’லவ்லி’ படத்தின் ட்ரெய்லர்
மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியானது ’லவ்லி’ படத்தின் ட்ரெய்லர்...