குட் பேட் அக்லி படத்தை ரசிகர்களுடன் பார்த்த அஜித்தின் மனைவி மற்றும் மகள் – வைரலாகும் வீடியோ
Shalini Ajith and Anoushka Ajith watch Good Bad Ugly: அஜித் குமாரின் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை அவரது மனைவி ஷாலினி மற்றும் மகள் அனௌஷ்கா ஆகியோர் ரோகிணி தியேட்டரில் முதல் நாள், முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

குட் பேட் அக்லி படத்தை ரசிகர்களுடன் பார்த்த அஜித்தின் மனைவி மற்றும் மகள்
2025-ம் ஆண்டில் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான குட் பேட் அக்லி (Good Bad Ugly) இன்று ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதன் வெளியீட்டு நாளில் திரையரங்குகள் நிறைந்து ரசிகர்களின் கூட்டத்தில் அலைமோதுகிறது. மேலும் சென்னையின் அடையாள சின்னமான ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுக்கு கூடுதலாக ஒரு ட்ரீட் கிடைத்துள்ளது. அது என்ன என்றால் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி (Shalini) மற்றும் அஜித்தின் மகள் அனௌஷ்கா முதல் நாள் முதல் காட்சிக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் தந்தனர். இது அங்கு கூடியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோக்களில் ஷாலினியும் அனௌஷ்காவும் ரசிகர்களுடன் சேர்ந்து சிரித்து ஆரவாரம் செய்கிறார்கள்.
அஜித்தின் அறிமுகக் காட்சியின் போது பார்வையாளர்கள் விசில், கைதட்டல், ஆரவாரம் என்று திரையரங்கையே அதிர வைத்துள்ளனர். இதனைப் பார்த்த ஷாலினி தனது கணவர் மீது ரசிகர்கள் காட்டும் அன்பை நெகிழ்ச்சியுடன் கண்டு கழித்துள்ளார். அஜித் குமாரின் மகள் அனௌஷ்காவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காட்சியளித்தார்.
ஷாலினி மற்றும் அனௌஷ்கா குட் பேட் அக்லி படத்தை பார்க்கும் வீடியோ:
#AjithKumar ‘s #GoodBadUgly Shalini Ajith is watching movie at Rohini Theatre🔥🔥🔥
Follow us for more update🌀#GoodBadUglyFromApril10#VedikkaiPaarpavan #TrishaKrishnanpic.twitter.com/GMfQdpH52Z
— வேடிக்கை பார்ப்பவன் (@Vedikaiparpavin) April 10, 2025
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் அந்த இடத்தில் இருந்தனர். ரசிகர்களின் அதிரடியான வரவேற்பை பார்த்து ரசித்தனர். அஜித்தின் குடும்பத்தினரின் பிரமாண்டமான ஆரவாரம் மற்றும் உணர்ச்சிபூர்வமான வருகை முதல் நாள் முதல் காட்சியை இன்னும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரவி கந்தசாமி மற்றும் ஹரிஷ் மணிகண்டன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து சிம்ரன், டின்னு ஆனந்த், சாயாஜி ஷிண்டே, ஜாக்கி ஷெராஃப், சுனில், யோகி பாபு, உஷா உதுப், ராகுல் தேவ், கிங்ஸ்லி, ரோடீஸ் ரகு, பிரதீப் கப்ரா, பிரியா பிரகாஷ் என பலர் நடித்துள்ளனர்
இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி ஷங்கர் தயாரித்துள்ளனர், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.