Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Good Bad Ugly: மதுரையில் குட் பேட் அக்லி ரிலீஸாவதில் சிக்கல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Madurai: கோலிவுட் பேமஸ் நடிகர் அஜித் குமாரின் முன்னணி நடிப்பில் தற்போது, பிரமாண்டமாக ரிலீசிற்கு தயாராகிவரும் படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படமானது வரும் 2025, ஏப்ரல் 10ம் தேதியில் காலை 9 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படுவதில் மதுரையில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Good Bad Ugly: மதுரையில் குட் பேட் அக்லி ரிலீஸாவதில் சிக்கல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
குட் பேட் அக்லிImage Source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 08 Apr 2025 14:51 PM

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar)  63வது திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இந்த படத்தைப் பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியுள்ளார். இந்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகப் பிரம்மாண்ட கதைக்களத்துடன், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் வரும் 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் ஷோ தமிழகத்தில் (Tamil Nadu) காலை 6:30 மணிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பின் இந்த படத்தின் முதல் காட்சியானது காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. அதைத் தொடர்ந்து வரும் 2025 ஏப்ரல் 10ம் தேதியில் காலை 9 மணி காட்சிகளுடன் தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதைப் போல் கேரளா மாநிலத்திலும் காலை 9 மணி காட்சிகளுடன் வெளியாகிறது குட் பேட் அக்லி திரைப்படம். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் (Madurai district) குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் காட்சிகள் திரையிடப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில், குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் சுமார் ரூ. 1900 விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சாதாரணமான திரையரங்குகளில் வெறும் ரூ. 500 மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை திரையரங்குகளில் காட்சி ரத்து – காரணம் என்ன? :

இந்நிலையில், சாதாரண திரையரங்குகளைப் போல அனைத்து திரையரங்குகளிலும், ஒரு டிக்கெட் ரூ.500-க்கும் மட்டும் வைக்கப்பட்டால் மட்டும்தான், முதல் காட்சிகள் திரையரங்குகளில் வெளியிட அனுமதி கொடுக்கப்படும் என்றும். இல்லையெனில் 12 மணி காட்சிகளிலிருந்துதான் குட் பேட் அக்லி படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தரர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியானது தினத்தந்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் இன்னும் 30 தியேட்டர்களில் இப்படத்தின் டிக்கெட் விநியோகம் இன்னும் தொடங்கவில்லை, தற்போது இந்த தகவலானது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதைக் குறித்து நல்ல முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி திரைப்படம் :

நடிகர் அஜித் குமாரின் இந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் நடிகை சிம்ரனும் பல ஆண்டுகளுக்குப் பின், அஜித்தின் இந்த படத்தில் ஒரு முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு ஏற்ப மிகவும் அருமையான கதைக்களத்துடன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படமானது வெளியாகுவதற்கு இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில், ப்ரீ புக்கிங் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் 2025ல் படங்களில் பெரும் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில், அஜித்தின் இந்த படம் மக்களின் மனதை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் இதுதான்.. நடிகை ரம்பா!
சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் இதுதான்.. நடிகை ரம்பா!...
ஆஸ்கர் புதிய ரூல்ஸ்.. இது பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டு வருமா?
ஆஸ்கர் புதிய ரூல்ஸ்.. இது பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டு வருமா?...
திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வா? செந்தில் பாலாஜி விளக்கம்!
திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வா? செந்தில் பாலாஜி விளக்கம்!...
கனிமா பாடல் சிம்பு பாடலின் இன்ஸ்பிரேஷனா? - சந்தோஷ் நாராயணன்
கனிமா பாடல் சிம்பு பாடலின் இன்ஸ்பிரேஷனா? - சந்தோஷ் நாராயணன்...
மனித கண்களுக்கு புலப்படாத புதிய நிறம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மனித கண்களுக்கு புலப்படாத புதிய நிறம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...
சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம்!
சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம்!...
வீடு மற்றும் தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டணுமா? இதை செய்யுங்க!
வீடு மற்றும் தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டணுமா? இதை செய்யுங்க!...
புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்? கடைசி இடத்தில் CSK!
புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்? கடைசி இடத்தில் CSK!...
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!...
உணவுக்குழாய் புற்றுநோய்: பாதிப்புகள் என்னென்ன?
உணவுக்குழாய் புற்றுநோய்: பாதிப்புகள் என்னென்ன?...
ஒரு லட்சம் வரை உயரும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன ?
ஒரு லட்சம் வரை உயரும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன ?...