Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நான் அடைந்த சாதனைகள் அனைத்திற்கும் என் மனைவி ஷாலினி தான் பாராட்டுக்குரியவர் – அஜித் குமார்

Ajith Kumar credits wife Shalini: நடிகர் அஜித் குமார் இந்த 2025-ம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருதுப் பட்டியலில் இருப்பதாக ஜனவரி மாதம் அறிவித்தனர். அதனை தொடர்ந்து 28-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு குடியரசு தலைவரிடம் இருந்து விருதைப் பெற்றார். இது அனைத்திற்கும் தனது மனைவி தான் காரணம் என்று அஜித் குமார் தற்போது தெரிவித்துள்ளார்.

நான் அடைந்த சாதனைகள் அனைத்திற்கும் என் மனைவி ஷாலினி தான் பாராட்டுக்குரியவர் – அஜித் குமார்
அஜித் குமார், ஷாலினிImage Source: Instagram
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 30 Apr 2025 08:23 AM

நடிகர் அஜித் குமாரை (Actor Ajith Kumar) நினைத்து அவரது குடும்பம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொண்டது. ஆம் இந்த ஆண்டு துபாயில் நடைப்பெற்ற கார் பந்தையத்தில் அஜித் குமாரின் குழு இரண்டாவது இடத்தைப் பிடித்து வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. இதனை அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மட்டும் இன்றி நாட்டில் உள்ள அனைவருமே கொண்டாடித் தீர்த்தனர். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே அஜித்திற்கு வெற்றி முகமாகவே இருக்கிறது. தொடந்து இந்த ஆண்டு மட்டுமே இதுவரை 2 படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் 3 கார் பந்தையங்களில் வெற்றிப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார், திங்கட்கிழமை ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இந்த சிறப்பு மிக்க விருது சந்தேகத்திற்கு இடமின்றி அஜித்தின் தொழில் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் தனது வெற்றி தனியாக அடையப்படவில்லை என்பதை நடிகர் உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது மனைவி ஷாலினியின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், இன்று அவர் அனுபவிக்கும் உயரங்களை அடைய உதவிய தியாகங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நடிகை ஷாலினி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

ஷாலினியைப் குறித்து பேசவேண்டும் என்றால் அவர் திருமணத்திற்கு முன்பே முன்னணி நடிகையாக இருதார். தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும் போது அதிலிருந்து விலகி குடும்பத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்ற துணிச்சலான முடிவை எடுத்தார். இந்த நிலையில், அஜித் இந்தியா டுடே செய்தியிடம் பேசியபோது நான் இந்த இடத்தில் இருப்பதற்கு முக்கிய பங்கை எனது மனைவி ஷாலினிக்குதான் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் அஜித் சில நேரங்களில் என் முடிவுகள் சரியாக அமையவில்லை. ஆனால் அந்த கடினமான காலங்களில் அவர் என்னுடன் நின்றார். என்னை ஊக்கப்படுதவும் அவர் தவறவில்லை. நான் சாதித்த அனைத்திற்கும் என் மனைவி ஷாலினி தான் பாராட்டுக்குரியவர் என்றும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை: ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும்?
திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை: ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும்?...
காணாமல் போன இந்திய மாணவி.. கனடாவில் சடலமாக மீட்பு!
காணாமல் போன இந்திய மாணவி.. கனடாவில் சடலமாக மீட்பு!...
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!...
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி...
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?...
"இனி இப்படியெல்லாம் செய்யாதீங்க" தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?...
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்...
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்...
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ...