CSKvSRH: தல ஆட்டத்தை பார்க்க வந்த ஏகே – சேப்பாக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அஜித் – வைரலாகும் வீடியோ
AK and SK in Chennai Chepauk: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் தங்களது குடும்பத்துடன் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

சிவகார்த்திகேயன் - அஜித் குமார்
ஐபிஎல் (IPL) 2025ல் ஏப்ரல் 25, 2025 அன்று நடைபெறும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் 9 வது இடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில் முதலில் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷேக் ரஷீத், ஷமியின் பந்து வீச்சில் டக் அவுட்டானார். அவருடன் களமிங்கிய ஆயூஸ் மாத்ரே பவுண்டரிகளாக அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட்டானார்.
ஒரு பக்கம் சென்னை சூப்பர் கிங்கஸ் அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பி ரசிகர்களை ஏமாற்ற, அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியை காண வந்திருக்கிறார்.
சேப்பாக்கத்தில் தல ஆட்டத்தை பார்க்க வந்த ஏகே
Thala #Ajithkumar arrived in Chepauk in a Suit..🤩🔥🔥❣️ pic.twitter.com/TM1WDGoEMo
— Laxmi Kanth (@iammoviebuff007) April 25, 2025
பொதுவாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத அஜித் ஐபிஎல் போட்டியைக் காண வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனது பாணியில் கோட் சூட் போட்டு ஸ்டைலாக வந்திருந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து எக்ஸ் பக்கத்தில் ThalaAjithOnAnbuden என்ற ஹேஸ்டேக் போட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஏப்ரல் 24, 2025 அன்று தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினர். இதனை முன்னிட்டு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வந்த அஜித், தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாட சென்னை திரும்பினார். இருவரும் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சேப்பாக்கத்தில் ஏகேவுடன் எஸ்கே
Making fun of gun games out there 🤣#Ajithkumar #Sivakarthikeyan pic.twitter.com/DmIYvhh784
— Britto’s Touch 📸 (@BrittosTouch) April 25, 2025
நடிகர் அஜித்துடன் சிவகார்த்திகேயனும் தனது மனைவியுடன் போட்டியைக் காண வந்திருந்தார். அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பேசிக்கொள்ளும் போட்டோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அமரன் பட புரமோஷன்களில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், அஜித்திடம் தன்னை வெல்கம் டு பிக் லீக் என வாழ்த்தியதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான தமிழக அளவில் 14 நாட்களில் ரூ.172.3 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.