Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: வசூல் மன்னன் அஜித்.. குட் பேட் அக்லி 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

Good Bad Ugly Movie 10th Day Collection : தமிழ் திரைப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் அஜித் குமார் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியது. இந்த படமானது வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில், இதுவரை மொத்தமாக செய்த கலெக்ஷன் பற்றி பார்க்கலாம்.

Ajith Kumar: வசூல் மன்னன் அஜித்.. குட் பேட் அக்லி 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?
அஜித் குமார் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 20 Apr 2025 18:10 PM

விடாமுயற்சி (Vidaamuyarchi) திரைப்படத்தை தொடர்ந்து நடிகர்கள் அஜித் குமார் (Ajith Kumar)  மற்றும் திரிஷாவின் (Trisha)  முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இந்த படமானது மிகவும் மாறுபட்ட கதைக்களத்துடன், அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. அஜித்தின் ஹிட் படங்களின் கதாபாத்திரங்களை இந்த படத்திலும் பயன்படுத்தி, கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் தமிழ் ஹிட் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படமானது தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த படமானது வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில், இதுவரை உலகளாவிய வசூலில் ரூ. 230 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வசூல் விவரமானது தினத்தந்தி செய்தி தளத்தில் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

குட் பேட் அக்லி படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படமானது கடும் தோல்வியை சந்தித்தது. தற்போது அந்த படத்தின் தோல்வியையும் சேர்த்து அஜித் குமாரின் இந்த திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு மட்டும் நடிகர் அஜித் குமார் ரூ.175 கோடிகளுக்கு மேல் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷாவும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அர்ஜுன்தாஸ், இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கதைக்களம் அவ்வளவு பெரியதாக இல்லாவிட்டாலும், இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் நடனமானது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

மம்முட்டியின் “எதிரும் புதிரும்” படத்தில் வெளியான “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடியிருந்தனர். இந்த படத்தில் இந்த பாடல் மிகவும் வரவேற்கப்பட்டது. இந்த பாடலில் நடிகர் அஜித்தின் சின்ன டான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் ஐரோப்பாவில் நடந்துவரும் கார் ரேஸில் பங்கேற்றுவருகிறார். இது சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தல் வைரலாகி வருகிறது.

இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!...
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா...
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு...
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?...
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?...
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!...
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...