பத்மபூஷன் விருது வாங்கும் அஜித்குமார்.. குடும்பத்துடன் டெல்லி சென்ற நடிகர்!
Ajith Kumar: கோலிவுட்டின் முன்னணி நடிகர் அஜித் குமாருக்கு மத்திய அரசு முன்னதாக பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது குறித்து நடிகர் அஜித் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருந்தார். அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று விருது விழாவிற்கு குடும்பத்துடன் நடிகர் அஜித் டெல்லிக்கு சென்றார்.

குடும்பத்தினருடன் நடிகர் அஜித் குமார்
நடிகர் அஜித் குமாருக்கு (Ajith Kumar) இந்த 2025-ம் ஆண்டு சிறப்பானதாகவே அமைந்துள்ளது. முன்னதாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் நடிகர் அஜித் குமார் துபாயில் நடைப்பெற்ற கார் ரேசிலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது குழு வெற்றியை அடைந்தது. அதானைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாருக்கும் நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை (Padma Bhushan) மத்தியை அரசு வழங்கி கவுரவிக்க உள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான போது நடிகர் அஜித் குமார் தனது தந்தை தற்போது இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டுஇயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியானது. நடிகர் அஜித் குமாரின் முந்தைய படங்களின் பல ரெஃபரன்ஸ்களை கொண்டு இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
பத்ம பூஷன் விருது:
ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு நாட்டின் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது நடிகர் அஜித் குமாருக்கு வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டனர். இன்று ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நடிகர் அஜித் குமார் இந்த விருதைப் பெற உள்ளார். இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் டெல்லிக்கு முன்னதாகவே விமானம் மூலம் சென்றடைந்தார்.
துபாய், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற 24H ரேசிங் தொடரில் நடிகர் அஜித் குமார் மூன்று பந்தயங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் குமார் டெல்லி செல்லும் வீடியோ:
பத்மபூஷன் விருதை பெறுவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றார் நடிகர் அஜித்குமார்#TamilNews #TV9Tamil #TamilNadu #Ajith pic.twitter.com/s7vaA9RG4L
— TV9 Tamil (@TV9Tamil) April 28, 2025
நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனௌஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இன்று திங்கள்கிழமை ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து இந்த விருதைப் பெற உள்ளார்.
இணையத்தில் பரவி வரும் வைரல் வீடியோவில், நடிகர் அஜித் குமார் விமான நிலைய ஊழியர்களுடன் நடந்து செல்வதைக் காணலாம். அவர் கருப்பு மற்றும் வெள்ளை நிற பிளேஸரில் காணப்படுகிறார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திராவும் உள்ளார்.