மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்… எந்தப் படத்தில் தெரியுமா?

Fahadh Faasil in Rajinikath Movie: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் 'ஜெயிலர் 2' படத்திற்காக மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்... எந்தப் படத்தில் தெரியுமா?

ஃபகத் ஃபாசில்

Published: 

25 Apr 2025 06:40 AM

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ஃபகத் பாசில் (Fahadh Faasil) தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் 2-வது பாகம் (Pushpa 2) உலக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தமிழில் இவர் முதன்முதலாம அறிமுகம் ஆன படம் 2017-ம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். இதில் கார்பரேட் வில்லனாக நடிகர் ஃபகத் ஃபாசில் தமிழில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் பேசும் மார்க்கெட்டிங் வசங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அதனைத் தொடர்ந்து தமிழில் இவர் நடித்தப் படம் சூப்பர் டீலக்ஸ். இதில் சமந்தாவின் கணவராக நடித்து அசத்தியிருப்பார்.

பின்பு 2022-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை நடிகர் ஃபகத் ஃபாசில் வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார் ஃபகத் ஃபாசில்.

மிரட்டும் வில்லனாக கோலிவுட் சினிமாவை மிரட்டினார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கொடூற வில்லனாக அந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபகத் ஃபாசில்.

இதில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் ரஜினிக்கு உதவும் திருடனாக நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். பேட்டரி என்ற கதாப்பாத்திரத்தில் வேட்டையன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருபார் நடிகர் ஃபகத் ஃபாசில். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகர் ஃபகத் ஃபாசில் என்ன தமிழ் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

அதன்படி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்த ரஜினி அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்தப் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

அதன்படி ஜெயிலர் 2 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றுவ் வரும் நிலையில் வேட்டையன் படத்திற்கு பிறகு நடிகர் ஃபகத் ஃபாசில் இந்தப் படத்திலும் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.