அஜித் எப்படி உடல் எடையைக் குறைத்தார்? – சீக்ரெட் சொன்ன இயக்குநர் ஆதிக் – வைரலாகும் வீடியோ

Adhik on Ajith Kumar’s Weight Loss Journey: ''அஜித் சார் எடை குறைப்பு முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தார். குட் பேட் அக்லி படப்பிடிப்பின் போது தான் அதற்கான முயற்சியைத் தொடங்கினார். அவர் செய்ததை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது என்றார்.

அஜித் எப்படி உடல் எடையைக் குறைத்தார்? - சீக்ரெட் சொன்ன இயக்குநர் ஆதிக் - வைரலாகும் வீடியோ

அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்

Updated On: 

08 Apr 2025 19:00 PM

ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் அஜித் குமார் (Ajith Kumar), திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, ஜாக்கி ஷெராஃப், பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகவிருக்கிற படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்தப் படத்தைக் காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  ரசிகர் மன்றம் வேண்டாம், எல்லோரும் குடும்பத்தைக் கவனியுங்கள் என அஜித் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்கள் கட் அவுட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட் அவுட் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து முடித்துள்ள அஜித், தனது அஜித் குமார் ரேஸிங் சார்பாக சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்றுவருகிறார். இதற்காக தற்போது உடல் எடையைத் தடாலடியாக குறைத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். விடாமுயற்சி படத்தில் சில பிளாஸ்பேக் காட்சிகளில் படு ஸ்லிம்மான அஜித் குமார் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் எப்படி சட்டென உடல் எடையைக் குறைத்தார் என்பது தான் பலரது சந்தேகமாக இருந்தது.  ஒருவேளை டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தியிருப்பார்களோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்தன.

அஜித் எப்படி சட்டென உடல் எடையைக் குறைத்தார்?

 

இந்த நிலையில் ரசிகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். குட் பேட் அக்லி படம் தொடர்பாக கலாட்டா யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அஜித் சார் எடை குறைப்பு முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தார். குட் பேட் அக்லி படப்பிடிப்பின் போது தான் அதற்கான முயற்சியைத் தொடங்கினார். அவர் செய்ததை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. ஒருவேளை தான் சாப்பாடு சாப்பிடுவார். திடீரென ஒரு நாள் சாப்பிடாமல் விரதம் இருப்பார். வெறும் தண்ணீர் மட்டுமே குடிப்பார். அவருக்கு ரேசிங் போகும்போது ஃபிட்டா இருக்கணும்னு முடிவு பண்ணி இறங்கினார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர் தனது எடையைக் குறைத்துவிட்டார். அதற்கேற்ப அவர் உடல் எடை குறையும் வரை காத்திருந்து சில காட்சிகளை படமாக்கினேன் என்றார்.

அஜித்தின் மன உறுதி

அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளர் டிரெய்லரில் நிறைய காட்சிகளில் அஜித் ஒல்லியாக இருக்கிறார். அதற்கு ஏஐ அல்லது டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தினீர்களா? என இயக்குநர் ஆதிக்கிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ஏகே சார் இருக்கும்போது எதுக்கு ஏஐ?. அவர் மிகவும் அழகானவர், இனிமையானர். மனதில் அழகு இருந்தால் தான் வெளியில் தெரியும்னு சொல்லுவாங்க. அது தான் அஜித் சார். அவர் ஒன்னு முடிவு பண்ணிட்டார்னா. அத நடத்தாம விடமாட்டார்” என்று பேசினார்.