குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் பழைய பட ரெஃபரன்ஸ்களை பயன்படுத்தியது ஏன் – ஆதிக் ரவிசந்திரன் விளக்கம்
Adhik Ravichandran about Ajith Movies: சமீபத்திய நேர்காணலில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது வரவிருக்கும் குட் பேட் அக்லி வெளியீட்டில் நடிகர் அஜித் குமாரின் பழைய பட ரெஃபரன்ஸ்களை அதிகமாக பயன்படுத்தியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ட்ரெய்லர் வெளியான பிறகு ஏற்பட்ட விமர்சனத்திற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான குட் பேட் அக்லி (Good Bad Ugly) ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது வரவிருக்கும் படத்தில் அஜித்தின் முந்தைய படங்களைப் பற்றிய குறிப்புகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து அவர் வெளிப்படையாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சமீபத்தில் கலாட்டா பிளஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ்களை அதிகமாக பயன்படுத்தியது தமிழ் ரசிகர்கலிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று தெரிவித்துள்ளார். சில வசனங்களை அஜித் குமாரின் முந்தைய படங்களுக்கான ரெஃபரன்ஸ்களாக தமிழ் ரசிகர்கள் அங்கீகரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதே நேரத்தில் தமிழ் அல்லாத மற்ற மொழி ரசிகர்களுக்கு அவை வெறுமனே பஞ்ச் டயலாக்குகளாகவே தோன்றும் என்றும் அவர் விளக்கியுள்ளார். இருந்த போதிலும் ரசிகர்களுக்கு அஜித் குமார் சாரின் முந்தைய திரைப்பட குறிப்புகள் பற்றிய முன் அறிவு தேவையில்லை என்றும் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லரில் அஜித் குமாரின் முந்தைய படங்களிலிருந்து மாஸ் தருணங்கள் பல இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப் பட்டதை ரசிகர்கள் கண்டனர். இயக்குனர் ஆதிக் தன்னைத்தானே ஒப்புக்கொண்ட அஜித் ரசிகராக இருப்பதால், படம் இந்த மாதிரி எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாகும். இது ஒரு பழைய கால கேங்ஸ்டர் தனது மனைவி மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் கதையைப் பின்தொடர்கிறது. இருப்பினும் ஒரு எதிரி தனது மகனுக்கு தீங்கு விளைவிப்பதன் மூலம் தனது குடும்பத்தை அச்சுறுத்தும்போது, கேங்ஸ்டர் தனது பழைய வழிகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
நடிகர் அஜித் குமார் முன்னணியில் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், சிம்ரன், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ஜாக்கி ஷெராஃப், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஆதிக் ரவிசந்திரன் மற்றும் ரவி கந்தசாமி மற்றும் ஹரிஷ் மணிகண்டன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தின் கதயை எழுதியுள்ளனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.