Jailer 2 Update : ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்.. மீண்டும் இணைந்த பிரபலங்கள்!
Jailer 2 Movie : கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜெயிலர் 2 திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி (Coolie) படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் மாறுபட்ட கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, மார்ச் இறுதியில் முழுமையாக நிறைவடைந்தது.
இப்படத்தைத் தொடர்ந்துதான் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் இணைந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகமானது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுடன் உருவாகிவரும் இப்படத்தின் ஷூட்டிங், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது இப்படத்திலிருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 1ல் ரஜினியுடன் நடித்த நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிரூனா மேனன் தற்போது ஜெயிலர் 2 படத்திலும் இணைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதைத் தெரிவித்திருந்தார். ஜெயிலர் 2 திரைப்படத்தில் மீண்டும் இணைந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் பதிவு :
#Jailer2 Shoot Begins #Rajinikanth #RamyaKrishna #Nelson pic.twitter.com/g7TOAh6syc
— Filmy Focus (@FilmyFocus) April 11, 2025
மீண்டும் இணைந்த பிரபலங்கள்
MUTHUVEL PANDIAN – Daughter in law joined #Jailer2 shooting that going to happen in Coimbatore for 20 days ❤️#MirnaaMenon #Rajinikanth𓃵 pic.twitter.com/3zag0nd9vc
— Itz_Prasanna (@prasanna_dbc) April 11, 2025
தற்போது ஜெயிலர் 2 படத்தை நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகை மிரூனா மேனனும் இணைந்துள்ளனர். ஜெயிலர் 1 படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், மருமகள் கதாபாத்திரத்தில் மிரூனா மேனனும் நடித்திருந்தனர். மேலும் தற்போது உருவாகிவரும் ஜெயிலர் 2 படத்திலும் அவர்கள் அதே கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தைப் போல இப்பாக்கத்திலும் அதிரடி ஆக்ஷ்ன் நிறைந்த காட்சிகள் இடம் பெரும் என்று கூறப்படுகிறது
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் முதல் பாகத்தைப் போல் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் முதல் பாகத்தின் பாடல்கள் ஹிட்டானதை தொடர்ந்து, இந்த படத்தின் பாடல்களும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனப் படக்குழு கூறியுள்ளது.