முந்தானை முடிச்சு படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு

Urvashi Talks About First Tamil Movie: தொடர்ந்து தமிழில் இயக்குநர்கள் பாக்யராஜ், தியாகராஜன், மணிவண்ணன், எஸ்.பி.முத்துராமன், கங்கை அமரன், மேஜர் சுந்தரராஜன், ராஜசேகர், பாண்டியராஜன், கஸ்தூரி ராஜா, ராம நாராயணன், விசு என பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார் நடிகை ஊர்வசி.

முந்தானை முடிச்சு படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு

நடிகை ஊர்வசி

Updated On: 

16 Apr 2025 16:28 PM

தமிழில் அறிமுகம் ஆன முந்தானை முடிச்சு (Munthanai Mudichu) படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஊர்வசி (Urvashi) பேட்டி ஒன்றில் கலகலப்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் 1969-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி பிறந்தார் நடிகை ஊர்வசி. இவருக்கு பெற்றோர்கள் வைத்தப் பெயர் கவிதா ரஞ்சினி. படத்திற்கா இவரது பெயரை ஊர்வசி என்று மாற்றினார். கடந்த 1983-ம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் நாயகியா சினிமா துறையில் காலடி வைத்தார் நடிகை ஊர்வசி. முதல் படமே தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது நடிகை ஊர்வசிக்கு. அதே ஆண்டு அபூர்வ சகோதரிகள் என்ற படத்தில் நடித்தார் ஊர்வசி. இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வரும் ஊர்வசி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். காதல் காமெடி என இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்றது. நாயகியாக நடித்த அவர் தற்போது முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஊர்வசி நடிப்பில் தமிழில் ஜே பேபி, அந்தகன், எமக்கு தொழில் ரொமான்ஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் வெளியான ஜே பேபி படத்தில் ஊர்வசியின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஊர்வசி தனது முதல் பட அனுபவத்தை பகிர்ந்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி தமிழில் இவர் இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிக்க முதலில் இவரது அக்கா கல்பனாவைதான் பாக்யராஜ் அனுகியுள்ளார்.

கல்பனா அந்த நேரத்தில் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்ததால் அவரது தங்கை ஊர்வசியை நடிக்க வைக்க பாக்யராஜ் முடிவெடுத்துள்ளார். அந்தப் படத்தில் பாக்யராஜ் தான் எனக்கு புடவ கட்டி நடிக்க சொல்லிக்கொடுத்தார். அவரு சொல்றத நடிப்பேன். திட்னா சாயிந்தரம் ட்ரெயினுக்கு கிளம்பிடுவனு சொல்லி சொல்லியே நடிச்சேன்.

பாக்யராஜ் கடுப்பாவாரு எதாவது சொன்னா வீட்டுக்கு போயிடுவனு சொல்ற பாதி படத்த நடிச்சுட்டு. இப்படி சொல்லி சொல்லியே அந்தப் படத்தில் நடித்து முடித்தேன் என்று நடிகை ஊர்வசி கலகலப்பாக அந்தப் பேட்டியில் பேசியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.