த்ரிஷாவின் அந்த சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது – எந்தப் படம் தெரியுமா
Actress Trisha: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, மாதவன், விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என பலருடன் ஜோடிப் போட்டு நடித்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் சுமார் 23 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரே நடிகை த்ரிஷா (Trisha Krishnan). இது த்ரிஷா ரசிகர்களுக்கு மிகவும் பெருமையான விசயமும் கூட. நடிகை த்ரிஷா இதந்த சாதனையை உறுதிப் படுத்தும் விதமாக அவரது நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் 6 படங்கள் வெளியாக உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நாயகனாக நடித்த படம் விடாமுயற்சி. இதில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்திலும் நடிகர் அஜித் குமாரின் ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திலும் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும், சூர்யாவுடன் அவரது 45-வது படத்திலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிகை த்ரிஷா நடித்த விஸ்வாம்பரா படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.
முன்னதாக மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஐடெண்டிட்டி படத்திலும் நடிகை த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி த்ரிஷாவின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருவது ரசிகர்கள் இடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை த்ரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இந்த நிலையில் முன்னதாக நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் ஒன்று 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் ‘நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா’ என்ற படம் தெலுங்கில் வெளியானது.
இந்தப் படத்தை இயக்குநர் பிரபு தேவா இயக்கியிருந்தார். இதில் நடிகை த்ரிஷா உடன் இணைந்து நடிகர்கள் சித்தார்த், ஸ்ரீஹரி, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், கன்னடம், இந்தி, ஒடியா, பஞ்சாபி, வங்காள மொழி என 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.