மாஸ் தான்… த்ரிஷாவின் நடிப்பில் இந்த ஆண்டு இத்தனை படங்களா?
Actress Trisha Krishnan: நடிகை த்ரிஷாவின் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 6 படங்கள் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதன்படி முன்னதாக நடிகர் அஜித் குமாருடன் இணைந்து பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான விடாமுயற்சி படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தார்.

த்ரிஷா
நடிகை த்ரிஷா (Trisha) 1983-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி பிறந்தார். 1999-ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் வெற்றிப்பெற்ற இவர் 1999-ம் ஆண்டு நடிகர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். நடிகை சிம்ரனின் தோழியாக நடித்த அந்த சில நொடி காட்சி த்ரிஷாவிற்கு ஒரு கவனத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் சூர்யா (Suriya) நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் நாயகியாக நடித்தார். காதலே வேண்டாம் என்று வெறுப்பாக சுத்தும் சூர்யாவை காதலில் விழவைப்பார் த்ரிஷா. அந்த படத்தின் மூலம் சூர்யாவை மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் காதலில் விழவைத்தார் என்றே கூறலாம்.
அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம், பீமா, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, என்னை அறிந்தால், கொடி, பொன்னியின் செல்வன் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, மாதவன், விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என பலருடன் ஜோடிப் போட்டு நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சுமார் 23 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா தான் என்பது நிதர்சனமான உண்மை. இதனை உறுதிப் படுத்தும் விதமாக நடிகை த்ரிஷாவின் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் 6 படங்கள் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து வெளியானப் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா அஜித் குமாரின் மனைவியாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான குட் பேட் அக்லி படத்திலும் நடிகர் அஜித் குமாரின் ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.
நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு:
இவர்களின் கூட்டணியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். முன்னதாக நடிகை த்ரிஷா மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஐடெண்டிட்டி படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப்.
இந்தப் படத்திலும் நடிகை த்ரிஷா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் 45-வது படத்திலும் நடிகை த்ரிஷா கமிட்டாகியுள்ளார். மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிகை த்ரிஷா நடித்த விஸ்வாம்பரா படம் மே மாதம் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடதக்கது.