Cinema Rewind: நடிகை திரிஷாவின் சிறுவயது ஆசை இதுவா.. கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
Trisha Krishnans wish : தமிழ் சினிமாவில் சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் சிறுவயதிலிருந்து ஒரு நாள் ஆணாக இருக்கவேண்டும் என அவரின் ஆசைபற்றி கூறிய விஷயம் குறித்து, முழுமையாகப் பார்க்கலாம்.

நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) , கடந்த 1999ம் ஆண்டு வெளியான ஜோடி (Jodi) என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரியதர்ஷனின் லேசா லேசா (Lesa Lesa) என்ற படத்தில் கதாநாயகியாக முதலில் கமிட்டானார். இந்த படத்தின் ரிலீசிற்கு தாமதமான நிலையில், இவரின் நடிப்பில் வெளியான முதல் படமாக மௌனம் பேசியதே (Mounam Pesiyadhe) என்ற திரைப்படம் அறியப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்தாக இவருக்குத் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது என்றே கூறலாம், கிட்டத்தட்ட 2003ம் ஆண்டில் மட்டுமே அவருக்கு 5 தமிழ்ப் படங்கள் வெளியாகியது.
இந்த படங்களை அடுத்துதான் தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமாகினார். தமிழ்ப் படங்களைப் போல இவரின் ஆரம்ப தெலுங்கு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகை திரிஷா விஜயுடன் கில்லி படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அந்த படமானது தற்போதுவரை ரசிகர்களுக்குப் பிடித்த படங்களின் லிஸ்டில் உள்ளது.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 23 வருடங்களாக நடிகை திரிஷா கிருஷ்ணன் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் சினிமாவில் ஆரம்பத்தில் நடிக்கும்போது அவர் பேசிய விஷயம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் நடிகை திரிஷா கிருஷ்ணன் நான் ஒரு தினத்திற்கு, ஆண் போல இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அது குறித்து முழுமையாக்கப் பார்க்கலாம்.
நடிகை த்ரிஷாவின் சிறுவயது ஆசை என்ன தெரியுமா?
நடிகை த்ரிஷா கிருஷ்ணன் அந்த வீடியோவில், “திரிஷா என்பவள் மிகவும் நல்ல நபர், ஏதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராகக் கூறிவிடுவேன். மேலும் என்னைப் பற்றிய பொய் சொல்லவேண்டும் என்றால் நான் மிகவும், பிடிவாதக்காரி என்று கூறலாம். நான் மிகவும் சாதாரண மனுஷிதான். எனக்குச் சிறுவயதில் இருந்தே ஒரு ஆசை இருக்கிறது, அந்த ஆசையை நான் என் அம்மாவிடம் எல்லாம் கூறியிருக்கிறேன்.
அது என்னவென்றால் நான் ஒரு நாளைக்காவது ஆணாக இருக்கவேண்டும் என்பதுதான். ஒரு ஆண் எப்படி இருப்பார், எவ்வாறு சிந்திப்பார் என ஒரு நாள் முழுவதும் மட்டும் ஆணாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது முதல் ஆசை. இந்த ஆசை நிறைவேறாது என்று தெரியும், ஆனாலும் எனது சிறுவயதிலிருந்து இந்த ஆசை இருக்கிறது என்று நடிகை திரிஷா கிருஷ்ணன் கூறியுள்ளார்.