Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trisha Krishnan : 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்.. நடிகை திரிஷா சொன்ன மகிழ்ச்சி செய்தி!

Trisha Talks About Acting With Simbu : தென்னிந்தியத் திரைப்படங்களில் சுமார் 22 வருடங்களுக்கும் மேலாகக் கதாநாயகியாகக் கலக்கி வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் தற்போது தக் லைப் படமானது வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிம்புவுடன் நடித்தது குறித்து த்ரிஷா பேசியுள்ளார்.

Trisha Krishnan : 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்.. நடிகை திரிஷா சொன்ன மகிழ்ச்சி செய்தி!
சிலம்பரசன் மற்றும் த்ரிஷா Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 19 Apr 2025 11:26 AM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி (Good Bad Ugly) போன்ற தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் குட் பேட் அக்லி படமானது ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன், சூர்யா 45 (Suriya 45), கமலின் (Kamal Haasan) தக் லைப் படத்தில் மற்றும் மலையாளத்திலும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் தக் லைப் (Thug Life) படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா (Jingucha) என்ற பாடலின் வெளியிட்டு விழா நேற்று 2025, ஏப்ரல் 18ம் தேதியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது. அதில் முக்கியமாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பேசிய விஷயம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேடையில் த்ரிஷா “இந்த படத்தில் நடித்து எனது கனவு நினைவான தருணமாகும். இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல் சார் உடன் இணைந்து இந்த படத்தில் நானும் இருப்பது என்னால் நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. நானும் சிம்புவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இணைந்து நடித்திருந்தோம். அந்த படத்தைத் தொடர்ந்து நடித்தார் சிம்புவுடன் அடுத்தது எப்போது படங்களில் நடிக்க போகிறீர்கள் எனப் பலரும் என்னிடம் கேட்டுவந்தனர். அவர்களின் கனவு தற்போது நினைவாகிவிட்டது. தக் லைப் படத்தின் மூலம் அந்த மேஜிக் நடந்துள்ளது என நடிகை த்ரிஷா மேடையில் பேசியுள்ளார்.

தக் லைப் படத்தின் முதல் பாடல் பதிவு :

கமல் ஹாசனின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை மணிரத்னத்துடன் இணைந்து, கமல் ஹாசனும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் கமல் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு அடுத்த லீட் பாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார். இந்த படமானதது மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. மேலும் இப்படத்தில் இவர்களுடன் நடிகர்கள் அசோக் செல்வன், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி, சானியா மல்ஹோத்ரா மற்றும் பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து, ஜிங்குச்சா என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. தற்போது இந்த பாடல் இணையதளங்களில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாகத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...