Trisha Krishnan : ”டாக்சிக் மக்களே.. எப்படி தான் வாழுறீங்க” வைரலாகும் த்ரிஷாவின் பதிவு

Actress Trisha Krishnan Condemned : தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக வளம் வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி படம் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது. தற்போது நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்டோரி சோஷில் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது குறித்துப் பார்க்கலாம்.

Trisha Krishnan : ”டாக்சிக் மக்களே.. எப்படி தான் வாழுறீங்க வைரலாகும் த்ரிஷாவின் பதிவு

டிகை த்ரிஷா கிருஷ்ணன்

Updated On: 

12 Apr 2025 09:58 AM

தென்னிந்திய சினிமாவில் சுமார் 22 வருடமாக முக்கிய கதாநாயகியாக வலம்வருபவர் த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) . இவர் தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என எக்கச்சக்க படங்களில் கமிட்டாகி வருகிறார். இவரின் நடிப்பில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 3 படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் (Ajith Kumar) முன்னணி நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி(Good Bad Ugly)  திரைப்படமும், மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஐடென்டிட்டி படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படங்களனைத்தும் மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்த படங்களைத் தொடர்ந்து மேலும், புதிய படங்களிலும் நடித்து வருகிறார். இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பேமஸாகி வருகிறார்.

இந்த குட் பேட் அக்லி படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியது. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து நடிகை த்ரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் டாக்சிக் மக்களே என்று கூறிய விஷமானது இணையதளங்களில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த பதிவை அவர் எதற்காக வெளியிட்டுள்ளார் என்றும் பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

அந்த பதிவில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் “சோஷியல் மீடியாவில் உட்கார்ந்து, பிறரைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களைப் பதிவிடும் டாக்சிக் மக்களே. நீங்கள் எவ்வாறு உங்களில் வாழ்க்கையை நடத்துகிறீர்கள், நன்றாக உறங்குகிறீர்களா என்ன?. தவறான கருத்துக்களைப் பரப்பும் நீங்கள் உண்மையான கோழைகள். கடவுள் கண்டிப்பாக உங்களை ஆசீர்வதிப்பார்” என்று நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷாவின் வைரல் பதிவு :

தற்போது இந்த தகவலானது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை த்ரிஷா என் இவ்வாறு பதிவை வெளியிட்டுள்ளார் என்று சந்தேகித்து வருகின்றனர். மேலும் சமீபகாலமாக த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகத் தகவல்கள் வைரலாகி வந்த நிலையில், அது குறித்து இவர் இப்படிப் பேசியுள்ளாரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். மேலும் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷாவின் புத்தம் புது படங்கள் :

நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் த்ரிஷா, சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவரின் ஜோடி சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது முற்றிலும் கிராமத்துக் கதைக்களத்துடன் வித்தியாசமாக உருவாக்கி வருவதாகா கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025,ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் நேரு எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகை த்ரிஷா, மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் தக் லைப் படத்திலும் முக்கியமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்து வரும் நிலையில் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஆகையால் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் மட்டும் இந்த ஆண்டு விடாமுயற்சி, ஐடென்டிட்டி, குட் பேட் அக்லி, தக் லைப் மற்றும் சூர்யா 45 என 5 படங்கள் உருவாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியும் வருகிறார்.