Priya Prakash Varrier : குட் பேட் அக்லி படத்தில் பிரியா பிரகாஷ் வாரியருக்கு முன் இவர்தான் நடிக்கவிருந்தாரா?
Good Bad Ugly Movie : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்திருந்த கதாபாத்திரம், மிகவும் வைரலானது. அந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் என்பது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

ரியா பிரகாஷ் வாரியர்
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) 63வது திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானதும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி வெற்றிபெற்றது. இந்த படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படமானது அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக அமைந்திருக்கும். ஏனென்றால் அஜித்தின் நடிப்பில் பல ஆண்டுகளுக்குப் பின் நகைச்சுவை, ஆக்ஷ்ன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படமானது அமைந்திருந்தது. இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித்தின் காட்சிகள் எவ்வாறு வரவேற்பைப் பெற்றிருந்ததோ அதைப் போல நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun Das) இடம்பெற்றிருந்த காட்சிகளும் ஹிட்டானது.
அதிலும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) மற்றும் அர்ஜுன்தாஸ் இணைந்து நடனமாடிய “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலும் மக்களிடையே ஹிட்டானது. இந்த படத்தில் முதலில் பிரியா பிரகாஷ் வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா?. வர வேறு யாருமில்லை சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் ஸ்ரீலீலாதான்.
குட் பேட் அக்லி படக்குழு வெளியிட்டிருந்த பதிவு :
Maamey!
AK is running the show at the box office 💥💥Running successfully in cinemas near you.
Book your tickets for #GoodBadUgly now!
🎟️ https://t.co/jRftZ6vpJD#BlockbusterGBU pic.twitter.com/ceFRGkQc2V— Mythri Movie Makers (@MythriOfficial) April 20, 2025
அஜித் குமாரின் இந்த படத்தில் மிகவும் ஹிட்டான பாடலாக இருப்பது “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடல். இந்த பாடலானது நடிகர் மம்முட்டியின் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் படத்திலிருந்து வெளியான பாடலாகும். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பிலிருந்து இப்படத்தில் 2 பாடல்கள் மட்டும் வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்தில் பழைய பாடல்கள் பல இடம்பெற்றிருந்தன.
இதில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையமைப்பில் வெளியாகிய பாடலின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல். இந்த பாடல் வெளியாகி இதுவரைக்கும் 26 ஆண்டுகள் கடந்துள்ளது. மேலும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் இந்த பாடல் இறுதியில் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலில் நடிகர் அர்ஜுன் தாஸுடன், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இணைந்து நடனமாடியிருந்தார். இந்த பாடலானது இந்த படம் ஹிட்டாவதற்கும் ஒரு தூணாக இருந்தது என்றே கூறலாம்.
இந்த படத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கதாபாத்திரத்தில், நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தால், மேலும் இப்படமானது வரவேற்பைப் பெற்றிருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நடிகை ஸ்ரீலீலா, அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் இடம்பெற்றிருந்த கிஸ்ஸிக் என்ற சிறப்புப் பாடலில் நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலும் மக்களிடையே சூப்பர் ஹிட்டானது.